twitter

    வானம் கொட்டட்டும் கதை

    வானம் கொட்டட்டும் இயக்குனர் தனா சேகரன் இயக்கத்தில் விக்ரம்பிரபு, மடோனா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காதல் மற்றும் குடும்ப திரைப்படம். இத்திரைப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான மணி ரத்னம் தயாரிக்க இசையமைப்பாளர் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ளார்.

    குடும்பம் மற்றும் அதிரடி படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் சங்கத்தமிழன் எடிட்டிங் செய்துள்ளார். இயக்குனர் மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து, வொய்நாட்க்ஸ் நிறுவனம் இப்படத்தினை விநியோகம் செய்துள்ளது.


    வானம் கொட்டட்டும் படத்தின் கதை

    சரத்குமார் தேனி மாவட்டத்தில் அனைவராலும் அறியப்படும் ஒரு முக்கியமான நபர். தனது அண்ணனின் உயிருக்கு ஆபத்து இருப்பதை பற்றி அறியும் சரத்குமார், தனது அண்ணனுக்காக ஒருவரை கொலை செய்து சிறைக்கு செல்கிறார்.

    சரத்குமார் மனைவியாக ராதிகா நடித்துள்ளார். சரத்குமார் கொலை குற்றத்திற்காக 16 வருடம் சிறைக்கு சென்றதால் தனது மகன் விக்ரம் பிரபு மற்றும் மகள் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் வெளியூருக்கு பிழைக்க தனி ஆளாக வருகிறார். தனி ஆளாக கஷ்டப்பட்டு தனது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் ராதிகா, கணவரை போல் அதிரடி குணம் கொண்ட மகனை கண்டித்து நல்வழிப் படுத்துகிறார்.

    16 வருடங்கள் கழித்து சிறையில் இருந்து வெளியாகும் சரத்குமார் தனது குடும்பத்துடன் இணைய விரும்புகிறார். ஆனால் சில சூழ்நிலைகளால் சரத்குமார் மற்றும் அவரது பிள்ளைகளுக்கும் பிரச்சனைகள் தொடங்குகிறது. சரத்குமார் தன் பிள்ளைகளுக்கு உதவும் நோக்கத்தோடு சில செயல்களை செய்ய, அது அவருக்கு எதிராகவே வருகிறது. இதனால் வெள்ளந்தியாய் பல இடங்களில் சரத்குமார் இருக்கிறார்.

    16 வருடங்கள் கழித்து தனது தந்தையை கொலை செய்த சரத்குமாரை பழிவாங்க அவரது மகன் நந்தா சென்னை வருகிறார். நந்தா சரத்குமாரை பழிவாங்கினாரா? சரத்குமார் தனது குடும்பத்துடன் இணைந்தார் என்பதே படத்தின் கதை.

    வானம் கொட்டட்டும் படத்தின் பிரத்யேக தகவல்கள்

    வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் கணவன் - மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இவர்களுக்கு மகனாக விக்ரம் பிரபுவும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர்.

    இப்படத்தில் இவர்களுடன் சாந்தனு பாக்கியராஜ், மடோனா, பாலாஜி சக்திவேல் என திரையுலக பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள நிலையில், வில்லன் கதாபாத்திரத்தில் நந்தா நடித்துள்ளார்.

    இப்படத்தினை இயக்குனர் மணிரத்னமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த தன சேகரன் இயக்கி இயக்குனராக தமிழ் திரையில் அறிமுகமாகியுள்ளார். இவர் 2015ம் ஆண்டு மணி ரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

    இப்படத்திற்கு இசையமைக்க முதலில் கோவிந்த வசந்த் இசையமைப்பாளராகவும் நாயகனாக ஜி வி பிரகாஷ் குமார் நடிப்பதாக இருந்த நிலையில் பின்னர் இவர்களுக்கு பதில் சித்ஸ்ரீராம் மற்றும் விக்ரம் பிரபு படக்குழுவில் இணைந்துள்ளனர்.

    பாடகராக தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றி புகழ்பெற்ற சித்ஸ்ரீராம் இப்படத்தில் இசையமைப்பாளராக தமிழ் திரையின் மூலம் தனது புதிய அனுபவத்தை தொடங்கியுள்ளார்.

    வானம் கொட்டட்டும் படத்தின் ரிலீஸ் தகவல்கள்

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2019 நவம்பர் மாதம் 13ல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று பிரபலமானது இதனை தொடர்ந்து 2020 ஜனவரி 8ல் இப்படத்தின் டீஸர் மற்றும் ஜனவரி 23ல் ட்ரைலர் வெளியாகி தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்று புகழ் பெற்றது.

    இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமாகியுள்ளது. படத்தின் பாடல்கள் நவம்பர் 15 முதல் சிங்கள் பாடல்களாக வெளியாகி பிரபலமான நிலையில், இப்படத்தின் முழுப்பாடல்களும் வானம் கொட்டட்டும் படத்தின் ட்ரைலர் உடன் வெளியாகி புகழ் பெற்றது.

    **Note:Hey! Would you like to share the story of the movie வானம் கொட்டட்டும் with us? Please send it to us ([email protected]).