வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் (U)

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

10 May 2014
கதை
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் 2014ம் ஆண்டு வெளியான தமிழ் அதிரடி மற்றும் நகைச்சுவை திரைப்படம். இந்த திரைப்படத்தை ஸ்ரீநாத் இயக்க, சந்தானம், ஆஷ்னா சவேரி மற்றும் செந்தில் குமார் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் 2010ம் ஆண்டு வெளியான இராஜமௌலி யின் மரியாத ராமண்ணா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மறுதயாரிப்பு ஆகும். இது 2014 ஆம் ஆண்டு மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

கதை

 நிலத்தை விற்க சந்தானம் கிராமத்திற்கு செல்கிறார். செல்லும் வழியில்  கதாநாயகி வானதியுடன் நட்பாகிறார். நிலத்தை பார்க்கச்சென்ற சந்தானம் வானதியின் வீட்டிற்கு அவரின் ஓவிய புத்தகத்தை கொடுக்க செல்கிறார். வானதியின் குடும்பம் சந்தானத்தின் குடும்பத்தின் மீது பகை கொண்ட குடும்பம். பழிக்குப் பழி வாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் அக்குடும்பத்தில் பலி ஆடாக சந்தானம் நுழைகிறார். அக்குடும்பத்தை பற்றியும் தன்னை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டிருப்பதையும் சந்தானம் அறிந்து அவர்களிடமிருந்து எவ்வாறு சாமர்த்தியமாக தப்பிக்கிறார் என்பதே ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’.
Buy Movie Tickets