வள்ளி மயில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா, ஃபரியா அப்துல்லா என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிக்க, இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, மனிஷா யாதவ் என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஜய் கே சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார்.
வள்ளி மயில் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகும் ஒரு பான் இந்தியா படமாகும்.
வள்ளி மயில் படத்தின் தகவல்கள்
வள்ளி மயில் திரைப்படம் 1980களில் நடக்கும் கதையாக வடிவமைக்கப்பட்டு, இப்படத்திற்காக பட்ஜெட் பெரிய அளவில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு 2022 -மே 16ல் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கி தேனி, காரைக்குடி, கொடைக்கானல், கோபிச்செட்டி பாளையம் என பல இடங்களில் படப்பிடிப்பினை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.