வணக்கம் சென்னை அக்டோபர் 11, 2013இல் வெளியான தமிழ் காமெடி படம் திரைப்படம். இதனைப் புதுமுக இயக்குனர் கிருத்திகா உதயநிதி எழுதி இயக்க இப்படத்தினை தயாரித்துள்ளார். அவரின் கணவர் உதயநிதி ஸ்டாலின் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைத்துள்ளார்.
தேனி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பையனும், தென்னிந்தியக் கலாசாரத்தை புகைப்படம் எடுக்க வரும் லண்டன் வாழ் இந்தியப் பெண்ணும் சந்தித்துக்கொள்ளும் சண்டை ப்ளஸ் காதல் ஸ்பாட் 'வணக்கம் சென்னை’. சென்னைக்கு வரும் சாஃப்ட்வேர் துறை இளைஞன் சிவாவுக்கும், லண்டனில் இருந்து வரும் ப்ரியா ஆனந்துக்கும் ஒரே ஃப்ளாட்டை ஏமாற்றி வாடகைக்கு விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிறார் போலி ஹவுஸ் ஓனர் சந்தானம். ப்ரியா ஆனந்த், ஏற்கெனவே லண்டனில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண். மோதல் கடைசியில் காதலாக எட்டிப்பார்க்க, இருவரும் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா என்பதை கலகலப்பாகச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கிருத்திகா உதயநிதி.