வந்தா ராஜாவாதான் வருவேன் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சிலம்பரசன், மேகா ஆகாஷ், கேத்தரின் தெரசா, யோகிபாபு, ரோபோ ஷங்கர், மஹத் ராகவேந்திரா, பிரபு, ராஜேந்திரன், ரம்யா கிருஷ்னன், நாசர் மற்றும் பலர் நடித்துள்ள காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்க, ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
கதைச்சுருக்கம்
தாத்தாவின் இறுதி காலத்தில் அவரது ஆசையின் படி காதல் திருமணத்தால் பிரிந்துச்சென்ற தன் குடும்பத்தை மீண்டும் இணைப்பதே இப்படம்.
கதை
வெளிநாட்டில் வாழும் தமிழரான ரகுநாதன்(நாசர்) உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுகிறார், தன் பேரன் ஆதி(சிம்பு) -வை அழைத்து தனது இறுதிக்காலத்தில் தான் தன் மகளுடன் சேர்ந்து வாழவேண்டும் என வேண்டுகிறார். தாத்தாவின் ஆசையால் சிம்பு இந்தியாவிற்கு தன் அத்தை நந்தினி(ரம்யா கிருஷ்ணன்)-யை பார்க்க வருகிறார். பின்பு தன் அத்தையின் கோபம் குறையாமல் இருப்பதை கண்டு தன் அடையாளத்தை மறைத்து அவரிடமே டிரைவர் பணிக்கு சேர்கிறார். பின் தன் அத்தையின் கோபத்தை தணிப்பது ஒரு புறத்திலும் மற்றொரு புறம் காதல், நகைச்சுவை என கதை பயணிக்கிறது. இறுதியில் காதல் திருமணத்தால் பிரிந்துச்சென்ற தன் அத்தையை மீண்டும் குடும்பத்தோடு இணைத்தாரா என்பதே மீதிக்கதை.
இதில் காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட் என இயக்குனர் சுந்தர் சி பாணியில் கதை தொடர்கிறது.
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் எஸ்.டி.ஆர் (சிலம்பரசன்) நடித்து வெளிவந்திருக்கும் "வந்தா ராஜாவாதான் வருவேன்" திரைப்படம் அவரசமாக உருவாகியுள்ளது. முன்னதாக பொங்கல் வெளியிடுயென அறிவிக்கப்பட்ட இத்திரைப்படத்தை சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 1ல் வெளியுட்டுள்ளனர் படக்குழுவினர்.
இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு ஜனவரி 24-ம் அன்று "யு" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தெலுங்கில் பவர் ஸ்டார் பவர் கல்யாண் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற "அத்ரிந்திகி தாரடி" திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.