X
தமிழ் » திரைப்படங்கள் » வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜாவாதான் வருவேன்

வந்தா ராஜாவாதான் வருவேன்

Comedy | 01 Feb 2019 | U | 156 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

வந்தா ராஜாவாதான் வருவேன் கதை

வந்தா ராஜாவாதான் வருவேன் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சிலம்பரசன், மேகா ஆகாஷ், கேத்தரின் தெரசா, யோகிபாபு, ரோபோ ஷங்கர், மஹத் ராகவேந்திரா, பிரபு, ராஜேந்திரன், ரம்யா கிருஷ்னன், நாசர் மற்றும் பலர் நடித்துள்ள காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்க, ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். கதைச்சுருக்கம்  தாத்தாவின் இறுதி காலத்தில் அவரது ஆசையின் படி காதல் திருமணத்தால் பிரிந்துச்சென்ற தன் குடும்பத்தை மீண்டும் இணைப்பதே இப்படம். கதை  வெளிநாட்டில் வாழும் தமிழரான ரகுநாதன்(நாசர்) உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுகிறார், தன் பேரன் ஆதி(சிம்பு) -வை அழைத்து தனது இறுதிக்காலத்தில் தான் தன் மகளுடன் சேர்ந்து வாழவேண்டும் என வேண்டுகிறார். தாத்தாவின் ஆசையால்  சிம்பு இந்தியாவிற்கு தன் அத்தை நந்தினி(ரம்யா கிருஷ்ணன்)-யை  பார்க்க வருகிறார். பின்பு தன் அத்தையின் கோபம் குறையாமல் இருப்பதை கண்டு தன் அடையாளத்தை மறைத்து அவரிடமே டிரைவர் பணிக்கு சேர்கிறார். பின் தன் அத்தையின் கோபத்தை தணிப்பது ஒரு புறத்திலும் மற்றொரு புறம் காதல், நகைச்சுவை என கதை பயணிக்கிறது. இறுதியில் காதல் திருமணத்தால் பிரிந்துச்சென்ற தன் அத்தையை மீண்டும் குடும்பத்தோடு இணைத்தாரா என்பதே மீதிக்கதை. இதில் காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட் என இயக்குனர் சுந்தர் சி பாணியில் கதை தொடர்கிறது.  இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் எஸ்.டி.ஆர் (சிலம்பரசன்) நடித்து வெளிவந்திருக்கும் "வந்தா ராஜாவாதான் வருவேன்" திரைப்படம் அவரசமாக உருவாகியுள்ளது. முன்னதாக பொங்கல் வெளியிடுயென அறிவிக்கப்பட்ட இத்திரைப்படத்தை சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 1ல் வெளியுட்டுள்ளனர் படக்குழுவினர். இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு ஜனவரி 24-ம் அன்று "யு" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தெலுங்கில் பவர் ஸ்டார் பவர் கல்யாண் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற "அத்ரிந்திகி தாரடி" திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
Read More

வந்தா ராஜாவாதான் வருவேன் நடிகர்கள் & படக்குழுவினர்

வந்தா ராஜாவாதான் வருவேன் அணியின் தகவல்

இயக்குனர் சுந்தர் சி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஹிப்ஹாப் தமிழா ஆதி
தயாரிப்பாளர் சுபாஸ்கரன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
கோபத்தில் இருக்கும் அத்தையை சமாதானப்படுத்த, வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் மருமகனின் கதை தான் வந்தா ராஜாவாதான் வருவேன். உலக நாடுகளில் விரல்விட்டு எண்ணக் கூடிய பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் சிம்பு. தாத்தா நாசருக்கு சண்டை போட்டு பிரிந்து போன தனது மகள் ரம்யாகிருஷ்ணனை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. ஆனால் அது சாத்தியமில்லை என்கிறார் சிம்புவின் அப்பா சுமன்.தாத்தாவின் ஆசைக்காக தனது பரிவாரங்களுடன் அத்தையை தேடி சென்னை வருகிறார் மருமகன் சிம்பு. அத்தையை சந்தித்து எப்படி சமாதானம் செய்கிறார் என்பதை தனது வழக்கமாக கலகல காமெடி திரைக்கதையில், செண்டிமெண்ட், ரெலாமான்ஸ், மாஸ் ஆக்ஷன் மசாலா தூவி பரிமாறியிருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. சிம்பு - சுந்தர்.சி கூட்டணியில் வரும் முதல் படம் என்பதால், இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. அதனை முடிந்தவரை பூர்த்தி செய்திருக்கிறார்கள். காமெடி, செண்டிமெண்ட், ரொமான்ஸ், குத்து பாட்டு, மாஸ் ஆக்ஷன், பஞ்ச் டயலாக் என ஒரு புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி தான் படம் பார்த்துவிட்டு வெளியவரும் போது ஏற்படும். வழக்கமான அத்தை - மருமுகன் இடையிலான போட்டி, சண்டை என படத்தை நகர்த்தாமல், படத்தை ஜாலியாக தந்துள்ளது ரசிக்க வைக்கிறது.

வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • ALLEN,A 22 YEAR GUY IN ORDER TO SAVE HIS GIRLFRIEND MELVYNA JOINS THE UNDERWORLD.SHARAT SAXENA OFFERED HIM 10 LACS BUT A CONTRACT KILLER KHALID WAS AFTER ALLEN'S LIFE.DAYANAND SHETTY WITH GLASSES DISPLAY A RESPONSIBLE INVESTIGATING OFFICER.ON SHARA..

×
2.5 /5 Your Rating

வந்தா ராஜாவாதான் வருவேன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+