வஞ்சகர் உலகம் தமிழ் காதல் மற்றும் த்ரில்லர் திரைப்படம். இத்தயிரைப்படத்தினை மனோஜ் பீதா இயக்க, குரு சோமசுந்தரம், சிபி புவனா சந்திரன் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
கதை :
வில்லா ஒன்றில் வசிக்கும் மைதிலி (சாந்தினி தமிழரசன்) கொலை செய்யப்பட்டு அவரது வீட்டில் பிணமாக கிடக்கிறார். போலீசின் சந்தேகப் பார்வை எதிர்த்த வீட்டில் குடியிருக்கும் குடிகார இளைஞன் சண்முகம் எனும் சாம் (சிபி)மீது விழுகிறது. இந்த கொலையை வைத்து போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் துரைராஜை பிடிக்க நினைக்கிறார் பத்திரிகையாளர் விசாகன் (விசாகன் சூலூர் வணங்காமுடி). அவருக்கு உதவியாக இருக்கிறார் சக பத்திரிகையாளரான சம்யுக்தா (அனிஷா ஆம்புருஸ்). இந்த இருவரின் சந்தேகம் மைதிலியின் கணவர் பாலா (லென்ஸ் பட இயக்குனர் ஜெயப்பிரகாஷ்) மீது விழுகிறது. பாலாவை காப்பாற்றுவதற்காக நிழல் உலகில் வாழும் அவரது உயிர் நண்பரான கேங்ஸ்டர் சம்பத் வெளி உலகுக்கு வருகிறார். மைதிலியை கொலை செய்தது யார்? எதற்காக ? என்பது தான் படத்தின் கதை.