வட்டம் இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தனது தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரீர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்க, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
குறைந்த பொருட்செலவில் மக்கள் ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள வட்டம் படத்திற்கு ஒளிப்பதிவாளர் மாதேஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 2022, ஜூலை 29ல் இணையத்தள ஆன்லைன் ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.
வட்டம் திரைப்படத்தின் கதை
காதலியால் ஏமாற்றப்படும், சாதாரண நடுத்தரக்குடும்பத்து இளைஞனாக சிபிராஜ், ஆண்ட்ரியா ஒரு தொழிலதிபரின் மனைவி கதாபாத்திரத்தில் உள்ளனர்.
ஐடியில் வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு திடீரென வேலை பறிபோயிவிடுகிறது. இதனால் பழிதீர்த்துக் கொள்வதற்காகவும்,வாழ்க்கையை நடித்துவதற்காகவும் துணி மில் உரிமையாளரின் வாய் பேச முடியாத மகனை கடத்தி ஒன்றரை கோடி பணம் கேட்டு மிரட்டுகின்றனர்.
அதே நேரத்தில், காதல் தோல்வியால் வாழ்க்கையை வெறுத்து அலையும் சிபி ராஜ் தொழில் அதிபர் வம்சியின் மனைவி பார்வதி (ஆண்ட்ரியா)வை கடத்துகிறார். இறுதியில் சிபிராஜ் ஆண்ட்ரியாவை ஏன் கடத்தினார். அவரின் நோக்கம் என்ன, சிறுவனை கடத்திய ஐ டி ஊழியர்கள் என்ன ஆனார்கள் என்பதே படத்தின் மீதி கதை.