வெள்ளிக்கிழமை 13-ம் தேதி இயக்குனர் புகழ்மணி இயக்கத்தில் உருவாகிவரும் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தில், ரத்தன் மவுலி, ஸ்ராவியா, சுஜாகுமார், ராம்ஜி, சித்ரா லட்சுமணன், எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், வையாபுரி, ரேகா, நிரோஷா, மதுமிதா மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் ஒன்று கூடி நடிக்கும் திரைப்படம்.
இப்படத்தின் கதை நாயகன் ரத்தன் மவுலி தன் திருமணத்தை வெள்ளிக்கிழமை 13-ம் தேதி முடிவு செய்கிறார். அத்திருமணத்தை நிறுத்த பேய்கள் களமிறங்குகிறது. இத்திரைப்படத்தில் மொத்தம் 13 பேய்கள் உள்ளன. நாயகன் ஏன் அந்த தேதியை திருமண தேதியாக முடிவு செய்தார்? அதன் பின்னணி என்ன? அந்த தேதிக்கும் அந்த 13 பேய்களுக்கும் என்ன தொடர்பு என்பதே இப்படத்தின் கதை.