வெற்றி கொண்டான் இயக்குனர் வேலுதாஸ் இயக்கத்தில் நடிகர் விமல் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் அண்ணாதுரை தயாரிக்க, இசையமைப்பாளர் ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தில் நடிகர் விமலுடன் மிஷா நரங், சதீஷ், சுரேஷ் சந்திர மேனன், சௌந்தரராஜன் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். குடும்பங்களோடு கண்டு ரசிக்கும் வகையில் ஒரு அதிரடி படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரம்மி ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் கிஷோர் எடிட்டிங் செய்துள்ளார்.