X
முகப்பு சினி தரவரிசை

கௌரவ வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் தனுஷ், இதுவரை எத்தனை படங்களில் நடித்திருக்கிறார் தெரியுமா?

Author Sakthi Harinath | Published: Thursday, October 12, 2023, 04:37 PM [IST]

கௌரவ வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் தனுஷ், இதுவரை எத்தனை படங்களில் நடித்திருக்கிறார் தெரியுமா?. தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நடிகரான தனுஷ்-ன் திரைப்பயணத்தில் இவர் நடித்திருக்கும் கௌரவ வேட திரைப்படங்களின் பட்டியல் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் இவர் நடித்துள்ள சீடன், எதிர்நீச்சல், வை ராஜா வை என பல திரைப்படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. முழு லிஸ்ட் & விவரங்கள் இதோ.


cover image
Ethir Neechal

எதிர்நீச்சல் - 2013 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம். இப்படத்தினை நடிகர் தனுஷ் தனது வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து, இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்து ஒரு பாடலுக்கு நடமாடியுள்ளார்.


நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகை நயன்தாரா இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

Kuselan

குசேலன் - 2008 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம். இப்படம் ஒரு சினிமா வாழ்க்கையை தொடர்புடைய கதைக்களமாக உருவாகியுள்ளதால் இப்படத்தில் ஒரு நடிகராக தனுஷ் நடித்துள்ளார். 

Seedan

சீடன் - 2011 ஆம் ஆண்டு இயக்குனர் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் உன்னி முகுந்தன், அனன்யா, ஷீலா என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தில் தனுஷ் ஒரு கௌரவ வேடத்தில் நடித்து கலக்கியுள்ளார். இப்படத்தில் முருகன் கடவுளாக நடிகர் தனுஷ் நடித்திருக்கிறார்.

கம்மத் & கம்மத்

கம்மத் & கம்மத்  - 2013 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் உருவான இப்படத்தில் நடிகர் தனுஷ் கௌரவ வேடத்தில் நடித்து மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் மாமூட்டி மற்றும் திலீப் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Vai Raja Vai

வை ராஜா வை - நடிகர் தனுஷ்-ன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இப்படத்தி நடிகர் தனுஷ் 'கொக்கி குமாரு' என்ற கதாபாத்திரத்தின் மூலம் நடித்திருந்தார். இவர் நடித்த புதுப்பேட்டை பட கதாபாத்திரமாகும். 

Power Paandi

2017 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் இயக்குனர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பணியாற்றி இயக்கியுள்ள திரைப்படம், பா பாண்டி. இப்படத்தில் நடிகர் ராஜ்கிரண் & ரேவதி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இளம் வயது ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார்.

தி கிரே மேன்

தி கிரே மேன் - ஹாலிவுட் இயக்குனர்களான ரூஸோ சகோதரர் இயக்கத்தில் வெளியான அதிரடி ஹாலிவுட் திரைப்படம். இப்படத்தில் நடிகர் தனுஷ் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+