X
ப.பாண்டி

ப.பாண்டி

Comedy | 14 Apr 2017 | U | 126 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

ப.பாண்டி கதை

ப.பாண்டி நடிகர் தனுஷ் தனது சொந்த தயாரிப்பான வொண்டர் பிலிம்ஸ் மூலம் தானே இயக்கி தயாரித்து நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம். இப்படத்தில், ராஜ்கிரண், நதியா, பிரசன்னா, சாயா சிங், ரேவதி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு, சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். கதை :  எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி முதல் அபிதாப் பச்சன் வரை அனைவருக்கும் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து தன் மகன் பிரசன்னாவை வளர்க்கிறார் ராஜ்கிரண். பிரசன்னா செட்டில் ஆனா பின்னர், அவரும் அவர் மனைவி சாயா சிங்கும் ராஜ்கிரணை ஒரு பொருட்டாக மதிக்காத நிலையில், அவர் தன் பேரன், பேத்திக்காக அந்த வீட்டில் வசிக்கிறார். ஒரு கட்டத்தில் தனக்கான வாழ்க்கையை தான் வாழ வேண்டும் என்று அவர் தன்னுடைய 21 -ம் வயதில் தொலைத்த காதலை தேடி தன்னுடைய 61 -வது வயதில் செல்கிறார். அவர் செல்லும் அந்த பைக் ஓட்டத்தில் ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்.. அதில் சிறு வயது ராஜ்கிரணாக தனுஷும், சிறு வயது ரேவதியாக மடோனாவும் வருகிறார்.  ராஜ்கிரண் தன் முதல் காதலியை சந்தித்தாரா..? அந்த பிறகு என்ன ஆனது..? என்பதே விறுவிறுப்பும் உணர்ச்சியும் கலந்த மீதிக்கதை. 
Read More

ப.பாண்டி நடிகர்கள் & படக்குழுவினர்

ப.பாண்டி அணியின் தகவல்

இயக்குனர் தனுஷ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சீன் ரோல்டன்
தயாரிப்பாளர் தனுஷ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ப.பாண்டி விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
எத்தனையோ படங்களில் கோஸ்ட் இயக்குநராக இருந்த தனுஷ் வெளிப்படையாக இயக்கியுள்ள பவர் பாண்டி, கொஞ்சம் மஞ்சப்பை வாசத்துடன் வந்திருக்கிறது. ராஜ்கிரண் நடித்ததாலோ என்னமோ முதல் பாதியில் ஒவ்வொரு காட்சியும் மஞ்சப்பையை நினைவூட்டுகிறது. ஆனால் இந்த வேடத்துக்கு இவரை விட்டால் ஆளே இல்லை என்பது போல அப்படி ஒரு பொருத்தம். மொத்தப் படத்தையும் ராஜ்கிரண் தோளில் தூக்கி நிறுத்துகிறார். தாத்தாவாக நெகிழ்வு காட்டும் இந்த மனிதர், ஆக்ஷன் காட்சிகளில் பின்னுகிறார். இவர் அடித்தால்தான் நம்புகிற மாதிரி இருக்கிறது. சின்ன வயது ராஜ்கிரணாக வரும் தனுஷும் 'தட்டி தூக்கியிருக்கிறார்' நடிப்பிலும்! கபடி ஆடும் லாவகம், திருவிழாவில் கலாட்டா செய்யும் கூட்டத்தை எகத்தாளத்துடன் பந்தாடும் விதம், மடோனாவுடனான அவரது மென்மையான காதல்... எல்லாமே நிறைவாக அமைந்துள்ளன. மடோனாவை எண்ணெய் வழிய வழிய காட்டி டல்லடிக்கிறார்கள். ரேவதிக்கு சின்ன வேடம் என்றாலும், மிக அருமையாகச் செய்திருக்கிறார். முக்கியமாக ஓவர் ஆக்டிங் எதுவுமில்லாதது பெரிய ஆறுதல். பிரசன்னா, சாயா சிங், வழக்கம்போல லூஸுப் பெண்ணாக வரும் வித்யுலேகா, அந்தக் குழந்தைகள் அனைவருமே நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். வேல்ராஜின் ஒளிப்பதில் ஓகேதான். ஆனால் கிராமத்து ப்ளாஷ்பேக்கை எதற்காக இப்படி மங்களாக, வெளிறிப் போன டோனில் காட்ட வேண்டும்? நிகழ்காலமோ இறந்த காலமோ.. இயற்கை அதே வண்ணமயமாகத்தானே இருக்கிறது? ப்ளாஷ்பேக்குக்காக மரங்களும் பயிர்களும் சாம்பல் நிறத்துக்கா மாறிப் போகும்? ஷான் ரோல்டனின் பின்னணி இசை, பாடல்கள் காதுகளை உறுத்தவில்லை. இன்றைய சூழலில் இதுவே பெரிய விஷயம்தான். இயக்குநராக தனுஷுக்கு இந்தப் படம் நல்ல பெயரைத் தரும். காரணம் அவர் எடுத்துக் கொண்ட கதை. அதை கடைசிவரை நேர்மறையாகவே சொல்லியிருக்கும் விதம். வீட்டில் உள்ள மூத்தவர்களை அவர்களுக்கான சுதந்திரத்தை அனுபவிக்க விடாமல், பிள்ளைகள் எந்த அளவு காயப்படுத்துகிறார்கள் என்பதை ரொம்ப பிரச்சார நெடியில்லாமல் கையாண்டிருக்கிறார். க்ளைமாக்ஸை எந்த உறுத்தலும் வராத அளவுக்கு நிறைவாக அமைத்திருக்கிறார். குடும்பத்துடன் பார்க்கத் தகுதியான படம்!

ப.பாண்டி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ப.பாண்டி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+