»   »  அதை நினைக்கிறதா, இதை நினைக்கிறதா?: டபுள் டென்ஷனில் தனுஷ்

அதை நினைக்கிறதா, இதை நினைக்கிறதா?: டபுள் டென்ஷனில் தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: யார் மகன் வழக்கு விசாரணை, பவர் பாண்டி ரிலீஸை நினைத்து தனுஷ் டென்ஷனில் உள்ளாராம்.

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதி மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தனுஷின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கப்பட்டது.

லேசர்

லேசர்

கதிரேசன்-மீனாட்சி தம்பதி கூறிய அங்க அடையாளங்கள் தனுஷ் உடலில் இல்லை. ஆனால் அவர் உடலில் இருந்த சிறு மச்சம் லேசர் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது தெரிய வந்தது.

விசாரணை

விசாரணை

தனுஷ் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கதிரேசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணையை ஒத்தி வைக்கக் கோரினார். ஆனால் தனுஷின் வழக்கறிஞர் வாதாடத் தயார் என்றார்.

ஒத்திவைப்பு

ஒத்திவைப்பு

கதிரசேன் தரப்பின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். விசாரணை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

தனுஷ்

தனுஷ்

வரும் 11ம் தேதி யார் மகன் வழக்கு விசாரணை, 14ம் தேதி தான் இயக்கியுள்ள முதல் படமான் பவர் பாண்டி ரிலீஸ். இந்த இரண்டையும் நினைத்து தனுஷ் டென்ஷனில் உள்ளாராம்.

English summary
According to reports, Dhanush is tensed as his paternity case hearing is on april 11th and his directorial debut Power Paandi hits the screens on april 14th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil