»   »  கேட்டால் ரஜினியே கொடுத்திருப்பார், ஆனால் எம் மருமவன் தனுஷோ..: ராஜ்கிரண் ஃபீலிங்

கேட்டால் ரஜினியே கொடுத்திருப்பார், ஆனால் எம் மருமவன் தனுஷோ..: ராஜ்கிரண் ஃபீலிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் ரஜினி சாரிடம் டேட் கேட்டாலும் அவர் கொடுப்பார். ஆனால் நான் ராஜ்கிரணை ஹீரோவாக வைத்து தான் படம் எடுப்பேன் என்று அவர் எடுத்த ஒரு முடிவு அவரது தன்னம்பிக்கையை காட்டுகிறது என்று ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

தனுஷ் இயக்கியுள்ள முதல் படமான பவர் பாண்டியின் ட்ரெய்லர் புதன்கிழமை வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் மிகவும் அருமை என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.


இந்நிலையில் பவர் பாண்டி பிரஸ் மீட்டில் கலந்து கொண்ட ராஜ்கிரண் கூறுகையில்,


பவர் பாண்டி

பவர் பாண்டி

இந்த படம் பவர் பாண்டி எனக்கு ஒரு முக்கியமான படம். இயக்குனர் கஸ்தூரி ராஜா 27 வருடங்களுக்கு முன்னால் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலமாக என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்.


தனுஷ்

தனுஷ்

கஸ்தூரி ராஜாவின் மகன், என்னுடைய மருமகன் தனுஷ் அவர்கள் 27 வருடங்களுக்கு பிறகு என்னை மீண்டும் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். இப்படி ஒரு கொடுப்பினை அனைவருக்கும் அமையாது. எனக்கு அமைந்திருக்கிறது. இறைவனுக்கு நன்றி.


இயக்குனர்

இயக்குனர்

இயக்குனர் தனுஷ் அவர்களை பற்றி நான் சொல்ல ஆரம்பித்தால் மணிக்கணக்கில் நீளும். இரண்டு விஷயங்களை மட்டும் சொல்லிக் கொண்டு முடிக்க விரும்புகிறேன்.


இறை அருள்

இறை அருள்

முதலாவது இறை அருளால் அவர் இன்று வளர்ந்திருக்கும் உயரம் மிக அதிகம். தமிழில் முன்னணி ஹீரோ, தெலுங்கில் மிகப்பெரிய பெயர். இந்தியில் பெயர், ஹாலிவுட் படங்களில் நடிக்கிறார்.


ரஜினி

ரஜினி

இப்படி இருக்கும் ஒருவர் தான் இயக்கப் போகும் முதல் படத்திற்கு ரஜினி சாரிடம் டேட் கேட்டாலும் அவர் கொடுப்பார். ஆனால் நான் ராஜ்கிரணை ஹீரோவாக வைத்து தான் படம் எடுப்பேன் என்று அவர் எடுத்த ஒரு முடிவு அவரது தன்னம்பிக்கை. அந்த தன்னம்பிக்கையை இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொரு நொடியும் நான் உணர்ந்தேன்.


பிரசன்னா

பிரசன்னா

இந்த குழுவில் எல்லோருமே எனக்கு பிள்ளைகள் தான். என் பிள்ளை பிரசன்னா சொன்ன மாதிரி நான் புதிதாக நடிக்க வந்தவனை போல கேட்டுக் கொண்டிருந்தேன் என்பது பிரச்சன்னாவின் பார்வை. உண்மை அது தான். ஏனென்றால் மருமகன் தனுஷ் எனக்கு விளக்கிய விதத்தில் என்னை அறியாமல் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.


ராஜ்கிரண்

ராஜ்கிரண்

இன்னும் சொல்லப் போனால் இதுவரை ராஜ்கிரண் என்று இருந்த பிம்பத்தை உடைத்தெறிந்துவிட்டு புதிதாக ஒரு ராஜ்கிரணை இந்த படத்தின் மூலம் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் தனுஷ்.


பவர்

பவர்

தனுஷ் சொல்லித் தந்த விதத்தில் இந்த பவர் பாண்டி என்பவன் இப்படி இருப்பான், இப்படி நடப்பான், இப்படி பேசுவான், இப்படி சிந்திப்பான் என்று அவர் எனக்கு ஊட்டிய விதத்தில் 50 சதவீதம் நான் பண்ணியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.


100 சதவீதம்

100 சதவீதம்

100 சதவீதம் பண்ணியிருந்தால் டோட்டலாவே ராஜ்கிரண் என்கிற கேரக்டரே மறந்துவிடும். அந்த அளவுக்கு அவர் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்துள்ளார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் ராஜ்கிரண்.


English summary
Rajkiran said that Dhanush wants him to be his hero in his directorial debut Power Paandi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil