Don't Miss!
- News
EV துறையில் 2030-க்குள் 5 கோடி வேலை வாய்ப்புகள்.. பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
- Finance
Economic survey 2023:அரசின் மூலதன செலவு இலக்கு எட்டப்படலாம்.. ஆய்வறிக்கையில் குட் நியூஸ்!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 5 ராசிக்காரங்க வெற்றிப்படிக்கட்டில் வேகமா ஏறப்போறாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports
2வது டி20ல் நடந்த குளறுபடி.. கடைசி நேரத்தில் இந்தியா வைத்த கோரிக்கை.. அதிகாரி அதிரடி நீக்கம்- விவரம்
- Automobiles
பெட்டி பெட்டியா வெளிநாடுகளுக்கு பயணித்த சூப்பர் மீட்டியோர்650! ராயல் என்பீல்டு அதோட வேலைய காட்ட தொடங்கிருச்சு!
- Technology
முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் இறக்கிவிட்ட Noise.! என்னென்ன அம்சங்கள்?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்த மாதிரி படங்கள பார்க்க பார்க்க இன்னும் பிடிக்கும்.. தமிழ்ப்படங்களை பாராட்டிய நெட்பிளிக்ஸ்!
சென்னை: என்னை மாதிரி பசங்கள பார்த்தா பிடிக்காது, பார்க்க பார்க்க பிடிக்கும் என தனுஷ் பேசும் வசனத்தை போல, நெட்பிளிக்ஸ் சில சிறந்த தமிழ்ப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
Recommended Video
இந்த மாதிரி படங்கள பார்த்தா உடனேயும் பிடிக்கும்.. பார்க்க பார்க்க இன்னும் பிடிக்கும் என நெட்பிளிக்ஸ் என்ன என்ன படங்களை பட்டியலிட்டுள்ளது என்பதை காண்போம்.
எங்களின்
அன்பை
காட்டவில்லை..
நல்லா
எடிட்
பண்ணியிருக்காங்க..
விஜய்
டிவியை
விளாசிய
அர்ச்சனா!
இயக்குநர் ஹலிதா ஷமீம் நெட்பிளிக்ஸின் இந்த பட்டியலுக்கு லைக் போட்டுள்ளார்.

நெட்பிளிக்ஸில் தமிழ் ட்வீட்
நெட்பிளிக்ஸ் இந்தியா சமீப காலமாக தமிழ் படங்களின் மீது கண் வைத்து வருகிறது. தளபதி விஜய் பற்றிய ட்வீட்களும், தமிழ்ப் படங்கள் குறித்த ட்வீட்களுமாக குவிந்து வருகின்றன. அந்தகாரம், பாவக் கதைகள் என வரிசையாக புதுப் படங்களை நெட்பிளிக்ஸில் இறக்கி வருகிறது.

பாராட்டுக்களை அள்ளும் பாவக் கதைகள்
சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான பாவக் கதைகள் ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய 4 இயக்குநர்கள் இணைந்து தனித் தனியாக இயக்கிய கதைகளை பாவக் கதைகளாக நெட்பிளிக்ஸில் வெளியிட்டு வெற்றியை பெற்றுள்ளனர். ஒவ்வொரு கதையும் ஆழமாகவும் அழுத்தமாகவும் இருப்பதாக மக்கள் பாராட்டி வருகின்றனர்.

பார்க்க பார்க்க இன்னும் பிடிக்கும்
இந்நிலையில், தற்போது நெட்பிளிக்ஸ் இந்தியா போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது. இந்த படங்களை பார்த்தால் உடனேயும் பிடிக்கும், பார்க்க பார்க்க இன்னும் பிடிக்கும் என பாராட்டியுள்ளது. அந்தகாரம், ஒத்த செருப்பு சைஸ் 7, ஆரஞ்சு மிட்டாய், பவர் பாண்டி, சில்லுக் கருப்பட்டி மற்றும் கே.டி. உள்ளிட்ட படங்களை நெட்பிளிக்ஸ் பட்டியலிட்டுள்ளது.

ஹார்ட் போட்ட ஹலிதா
இந்த வரிசையில் இயக்குநர் ஹலிதா ஷமீமின் சில்லுக்கருப்பட்டி படம் இடம்பெற்றுள்ள நிலையில், நெட்பிளிக்ஸ் இந்தியா ட்வீட்டுக்கு ஹார்ட்டின் லைக் போட்டுள்ளார் ஹலிதா. சரியான படத் தேர்வு என கோலிவுட் ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர். மாத சந்தாவை குறைத்தால் இன்னமும் நல்லா இருக்கும் என ரசிகர்கள் கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.