twitter

    விருமன் கதை

    விருமன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ் கிரண், பிரகாஷ் ராஜ் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் குடும்பம் மற்றும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமா நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான சூர்யா சிவகுமார் தனது '2D' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    அதிரடி - த்ரில்லர் மற்றும் குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன் எடிட்டிங் செய்துள்ளார். 

    விருமன் திரைப்படம் 2022, ஆகஸ்ட் 12ல் சுதந்திர தின ஸ்பெஷல் ரிலீஸ் படமாக உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.




    விருமன் படத்தின் கதை

    கதைக்கரு

    பிரகாஷ் ராஜ் - சரண்யா பொன்வண்ணனிற்கு பிறக்கும் கடைசி மகனான கார்த்தி சில காரணங்களால் தந்தையை வெறுத்து தன் தாய் மாமன் ராஜ் கிரானுடன் வாழ்ந்து வருகிறார். கிராமத்தில் ஒரு அதிகாரியாக பலரால் மதிக்கப்படும் பிரகாஷ் ராஜ், தன் மகன் கார்த்தியின் நடவடிக்கையால் நிலைகுலைகிறார். பிரகாஷ் ராஜ் - கார்த்தி இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை என்ன? எப்படி ஒன்று சேர்ந்தனர்? என்பதே படத்தின் கதைக்கரு.

    கதை

    கிராமத்து தாசில்தார் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். இவரது மனைவி சரண்யா பொன்வண்ணன் மிகவும் சாது. இவர்களுக்கு மொத்தம் 4 மகன்கள். இவர்களின் கடைசி மகன் விருமன் (கார்த்தி) தான் அம்மாவின் செல்லப் பிள்ளை.

    கார்த்தி சிறுவயதில் இருக்கும் பொழுது சரண்யா பொன்வண்ணன் தற்கொலை செய்து இறந்து விடுகிறார். தன் தாயின் இறப்பிற்கு தந்தை பிரகாஷ் ராஜ் தான் காரணம் என அவரை பழி வாங்க துடிக்கிறார், கார்த்தி.

    சிறுவயதில் இருந்து தன் தாய் மாமன் ராஜ்கிரண் அரவணைப்பில் வாழும் கார்த்தி, தனது தந்தையை கொலை செய்து, தன் பகையினை தீர்த்து கொள்ள காத்திருக்கிறார். 

    மறுபுறம் இளைய மகனான கார்த்தியை ஏமாற்றி சரண்யா பொன்வண்ணனின் சொத்தை அடைய நினைக்கிறார், பிரகாஷ் ராஜ். 

    தந்தை - மகன் இடையே நடக்கும் யுத்தம் தான், விருமன் படத்தின் கதை. இறுதியில் யார் வென்றார்? என்பதே இப்படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை.

    விருமன் திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள்

    கார்த்தி - இயக்குனர் முத்தையா கூட்டணியில் கொம்பன் திரைப்படம் வெளியாகி தமிழ் சினிமாவில் பிரமாண்ட ஹிட் படமாக புகழ் பெற்றது. மீண்டும் 2022 ஆம் ஆண்டு விருமன் படத்தின் மூலம் இதே கூட்டணி அமைந்துள்ளது. 

    இப்படத்தில் நாயகியாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கிய அதிதி ஷங்கர், தமிழ் திரையுலக முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கரின் இளைய மகள் ஆவார். அதிதி ஷங்கர் விருமன் படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் பலரால் அறியப்பட்டுள்ளார். விருமன் படம் வெளியாவதற்கு முன்பே இவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' திரைப்படம் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    விருமன் திரைப்படத்தில் நடிகை அதிதி ஷங்கர் 'மதுரை வீரன்' என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் பட்டி தொட்டி என பல இடங்களில் பலரால் ரசனையில் பிரபலமாகியுள்ளது. 

    விருமன் படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரை சார்ந்து உள்ள கிராமங்களில் நடந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கொரோன காலத்தில் நடந்து முடிந்துள்ளது. கார்த்தி, ராஜ் கிரண், அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், சூரி, இளவரசு, வடிவுக்கரசி, ஆர் கே சுரேஷ் என ஒரு திரை பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் முத்தையாவின் முந்திய படங்களை போன்று இப்படத்திலும் நடிகர் ஆர் கே சுரேஷ் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். 

    இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணைய தளத்தில் பலரால் கொண்டாடப்பட்டு வைரல் ஆகியுள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள காஞ்ச பூவு மற்றும் மதுரை வீரன் திரைப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று ட்ரெண்டிங் பாடலாக பிரபலமானது.
     
    சூர்யா தயாரிப்பில் கார்த்தி நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படமாகும், விருமன். இப்படத்திற்கு முன்பே இவர்கள் கூட்டணியில் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் வெளியானது.  
    **Note:Hey! Would you like to share the story of the movie விருமன் with us? Please send it to us ([email protected]).