twitter

    விஸ்வரூபம் கதை

    விசுவரூபம் 2013 இல் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். தெலுங்கில் விஸ்வரூபம் எனும் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் இந்தியில் விஸ்வரூப் எனும் பெயரிலும் வெளியானது. இப்படத்தை எழுதி-இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் கமல் ஹாசன் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட அனைத்துத் திரைப்படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்து முதல் இடத்தை விஸ்வரூபம் பிடித்தது.

    கதை:

    விஸ்வநாதன்(கமல்) ஒரு கதக் கலை நிபுணர். ஆனால் அவருடைய நளினத்தின் பேரினாலும், தன்னுடைய அலுவலக முதலாளியின் பொருட்டு ஆசை கொண்டதனாலும் நிருபமா (பூஜா குமார்) தன் கணவரைப்பற்றி துப்பறிய ஒருவனை பின்தொடர செய்கிறாள். அவன், வேறு ஒரு இடத்தில் தவறி செல்ல, ஜிஹாதி தீவிரவாதிகளின் கூடாரத்தில் சிக்கிக்கொள்கிறான். அவன் மூலமாக நிருபமாவின் அலுவலகம் தங்களை துப்பறிய அனுப்பினார்களோ என்று சந்தேகப்பட்டு விஸ்வநாதன் மற்றும் நிருபமாவை அவர்கள் தங்கள் இடத்தில் அடைத்து விசாரிக்கின்றனர். விஸ்வநாதன் உண்மையில் ஒரு இசுலாமிய மதத்தைச் சார்ந்தவர். விஸ்வநாதன் எவ்வாறு தப்பி செல்கின்றனர். என்ன நடந்தது என்பதை விறுவிறுப்புடன் கூறியுள்ளார் இயக்குனர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie விஸ்வரூபம் with us? Please send it to us ([email protected]).