வார் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் டைகர் ஆகிய பிரபல ஹிந்தி திரைப்பட நாயகர்கள் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா தனது யாஷ் ராஜ் பில்ம்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் விஷால் சேகர் இசையமைத்துள்ளார்.
ஹிந்தி மொழி படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தினை தமிழ் மொழியில் டப்பிங் செய்து இத்திரைப்படத்தினை வெளியிடவுள்ளனர் படக்குழுவினர். இத்திரைப்படத்தினை 2019-ஆம் அக்டோபர் 2-ல் தமிழில் வெளியிடவுள்ளனர் திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.
வார் திரைப்படத்தின் கதை
ராணுவ சீக்ரெட் ஏஜென்சியில் வேலை செய்யும் ஹிருத்திக் மற்றும் டைகர் ஒரு நேரத்தில் அந்த வேலைக்கு எதிராக செயல் பட தொடங்கும் ஹிருத்திக் பலரையும் கொல்கிறார். அவரை பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது அந்த வேலை டைகர் ஷெராப்க்கு வருகிறது அவர் ஏன் இப்படி செய்தார் டைகர் எப்படி அவரை பிடித்தார் இருதியில் என்ன என்பதே வார் படத்தின் கதை.