வாட்ச்மேன் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ், யோகிபாபு நடிக்கும் காதல், அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் தான் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
கதை
இப்படத்தின் நாயகனான பாலா (ஜிவி.பிரகாஷ்) ஓர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் நண்பர் தான் யோகிபாபு. இவர் ஒரு பணக்கார வீட்டு பெண்ணான சம்யுக்தாவை காதலித்து வருகிறார். இவருக்கு தன் காதலியை திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இதில் தொழில் நஷ்டம் என பணப்பிரச்சனைகளில் வாழும் ஜிவி.பிரகாஷ், பணத்திற்காக பல இடங்களில் உதவியை தேடுகிறார். இறுதியில் பணம் கிடைக்காமல் விரக்தியடைந்த ஜிவி.பிரகாஷ் பணத்திற்காக ஒரு பெரிய வீட்டில் திருடனாக நுழைகிறார்.
அவ்வீட்டிற்கு காவலாக இருக்கும் ப்ருனோ என்ற ஒரு நாயிடம் மாட்டிக்கொள்கிறார் ஜிவி.பிரகாஷ். அந்த நாயிடம் இருந்து ஜி.வி தப்ப வழின்றி மாட்டிக்கொள்ளும் நிலையில் எதிர்பாராவிதமாக வீட்டிற்குள் துப்பாக்கிகளுடன் ஒரு கூட்டம் வருகிறது.
பின்னர் அவர்களிடம் இருந்து தப்பித்தாரா ஜி.வி பிரகாஷ்?, வீட்டிற்குள் என்ன நடந்தது?, காதலியை திருமணம் செய்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.