X
தமிழ் » திரைப்படங்கள் » வாட்ச்மேன்
வாட்ச்மேன்

வாட்ச்மேன்

Action | Comedy | 12 Apr 2019 | U | 155 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

வாட்ச்மேன் கதை

வாட்ச்மேன் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ், யோகிபாபு நடிக்கும் காதல், அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் தான் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். கதை இப்படத்தின் நாயகனான பாலா (ஜிவி.பிரகாஷ்) ஓர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் நண்பர் தான் யோகிபாபு. இவர் ஒரு பணக்கார வீட்டு பெண்ணான சம்யுக்தாவை காதலித்து வருகிறார். இவருக்கு தன் காதலியை திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதில் தொழில் நஷ்டம் என பணப்பிரச்சனைகளில் வாழும் ஜிவி.பிரகாஷ், பணத்திற்காக பல இடங்களில் உதவியை தேடுகிறார். இறுதியில் பணம் கிடைக்காமல் விரக்தியடைந்த ஜிவி.பிரகாஷ் பணத்திற்காக ஒரு பெரிய வீட்டில் திருடனாக நுழைகிறார். அவ்வீட்டிற்கு காவலாக இருக்கும் ப்ருனோ என்ற ஒரு நாயிடம் மாட்டிக்கொள்கிறார் ஜிவி.பிரகாஷ். அந்த நாயிடம் இருந்து ஜி.வி தப்ப வழின்றி மாட்டிக்கொள்ளும்  நிலையில் எதிர்பாராவிதமாக வீட்டிற்குள் துப்பாக்கிகளுடன் ஒரு கூட்டம் வருகிறது.  பின்னர் அவர்களிடம் இருந்து தப்பித்தாரா ஜி.வி பிரகாஷ்?, வீட்டிற்குள் என்ன நடந்தது?, காதலியை திருமணம் செய்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
Read More

வாட்ச்மேன் நடிகர்கள் & படக்குழுவினர்

வாட்ச்மேன் அணியின் தகவல்

இயக்குனர் ஏ எல் விஜய்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

வாட்ச்மேன் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
முதல் பாதி படம் ஒரு நாளின் வெவ்வேறு நாளிகைகளில் முன்னும் பின்னுமாக பயணிக்கிறது. இது ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தினாலும், என்ன நடக்கிறது என்ற ஆவலை தூண்டுகிறது. இரண்டாம் பாதியில் சமமணிக்கு வரும்போது, படம் தெளிவான பாதையில் பயணிக்க தொடங்கி, விறுவிறுப்பாக நகர்கிறது. கடந்த வாரம் ரிலீசான குப்பத்து ராஜா, இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் போதே, அடுத்த படமும் ரிலீசாகி இருக்கிறது ஜி.வி.க்கு. இந்த படத்திலும் லோக்கல் பையனாக தான் வருகிறார். ஆனால் மெச்சூர்டாக நடித்திருக்கிறார். நாயைக் கண்டு பயந்து ஓடி, தண்டல்காரனை சமாளித்து, காதலியிடம் கெஞ்சி கூத்தாடி, பயங்கரவாதிகளுடன் மல்லுக்கட்டி என ஜி.வி.க்கு இந்த படத்தில் பெர்பாமன்ஸ் காட்ட வேண்டிய கட்டாயம் அதிகம். நன்றாகவே செய்திருக்கிறார். ஆரம்பத்தில் டெரர் எண்ட்ரி கொடுத்து, போகப் போக தனது செய்கைகளால் ஷோ ஸ்டீலராக மாறிவிடுகிறது ப்ரூனோ (நாய்). தனது முதலாளி மீது ப்ரூனோ வைத்திருக்கும் விஸ்வாசமும், அவரை காப்பாற்ற விவேகத்துடன், அது செய்யும் வீரதீர செயல்களும் ரசிக்க வைக்கின்றன.

வாட்ச்மேன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

வாட்ச்மேன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+