Just In
- 1 hr ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 2 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
- 3 hrs ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 3 hrs ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- News
நீதி, சுதந்திரம், சமத்துவம்.... நிரந்தர சித்தாந்தங்கள்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குடியரசு தின உரை
- Automobiles
எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...
- Finance
'மேட் இன் அமெரிக்கா' ஜோ பிடன் கையெழுத்திடும் புதிய உத்தரவு..!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Chowkidar: நாய்க்கும் ‘சவ்கிதார்’.. வாண்டடாக தமிழிசையை வம்புக்கு இழுக்கும் ஜி.வி.பிரகாஷ்!

சென்னை: பாரதிய ஜனதா கட்சியை வம்புக்கு இழுக்கும் வகையில், ஜி.வி.பிரகாஷின் வாட்ச்மேன் பட போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
2019 லோக் சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி "நான் மக்கள் பாதுகாவலர்" என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளது. இதனை குறிக்கும் வகையில் இதன் பொருள் தரும் இந்தி வார்த்தையான 'சவ்கிதார்' என்ற அடைமொழியை பாஜகவினர் தங்கள் பெயருக்கு முன் சூட்டிக்கொள்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் தனது பெயருக்கு முன்னாள் 'சவ்கிதார்' என வைத்துள்ளார். அவரை தொடர்ந்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், தனது பெயருக்கு முன்னாள் 'சவ்கிதார்' என்று சேர்த்துள்ளார்.
நிச்சயதார்த்தத்தில் தமிழ் ராக்கர்ஸா, 'ஆஷம்': விஷாலை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

சவ்கிதார் அடைமொழி
இதுபோல் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் பெயருக்கு முன்னாள் 'சவ்கிதார்' என சேர்த்து வருகின்றனர். இதனால் டிவிட்டரில் இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது.

வாட்ச்மேன் போஸ்டர்
இந்நிலையில், இதனை தங்கள் படத்தின் விளம்பரத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் படக்குழு ஒரு போஸ்டரை டிவிட்டரில் வெளியிட்டுள்ளது. அதில், "நானும் சவ்கிதார் தான்", என ஒரு நாய் சொல்வது போல் உள்ளது. அதாவது அந்த நாயின் கழுத்தில் "நானும் சவ்கிதார் தான்" என்ற பலகை மாட்டப்பட்டுள்ளது.
|
கலாய்க்கும் நெட்டிசன்
சும்மாவே செம கலாய் கலாய்க்கும் நம நெட்டிசன்களுக்கு, புல் மீல்ஸ் விருந்து வைத்தது போல் ஆகிவிட்டது வாட்ச்மேன் போஸ்டர். அவர் அவருக்கு தோன்றும் கருத்துகளை சகட்டு மேனிக்கு பதிவிட்டு வருகிறார்கள். இதன் மூலம் படத்திற்கு விளம்பரம் கிடைத்தது ஒருபுறம் என்றால், மறுபுறம் பாரதிய ஜனதா கட்சியை வம்புக்கு இழுத்தது போலவும் ஆகிவிட்டது.

ஜி.வி.பிரகாஷின் கொள்கை
இந்த படத்தின் கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ், மத்திய பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர். குறிப்பாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்கு ஆதரவு அளித்தவர். எனவே தான் இந்த போஸ்டரை படக்குழு துணிந்து வெளியிட்டுள்ளது.