X
வெப்பன்
Action | Drama | Thriller | 07 Jun 2024 | U/A | 120 Mins
Tamil

வெப்பன் கதை

வெப்பன் இயக்குனர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எம் எஸ் மன்சூர் தனது 'மில்லியன் ஸ்டூடியோ' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

அதிரடி - திரில்லர் திரைக்கதையில் ஒரு சுவாரஸ்யமான படமாக உருவாகியுள்ள 'வெப்பன்' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணன் எடிட்டிங் செய்துள்ளார்.

இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடிக்க, இவர்களுடன் இணைந்து தன்யா  ஹோப், ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, மாயா கிருஷ்ணன், யாஷிகா ஆனந்த், மைம் கோபி என பலர் நடித்துள்ளனர்.

2024 ஜூன் 7ல் உலகமெங்கும் திரையரங்கில் வெளியாகியுள்ள வெப்பன்  திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.



வெப்பன் திரைப்படத்தின் கதை
 
யூடியூபரும், இயற்கை ஆர்வலருமான வசந்த் ரவி, ஒரு அரிய நிகழ்வை சேகரிக்க தேனிக்கு செல்கிறார். பிளாக் சொசைட்டி இயக்கத்தை வழிநடத்தும் வில்லன் ராஜீவ் மேனனும் தேனிக்கு செல்கிறார். ராஜிவ் மேனன் தனது ஆட்கள் மூலம் தேனியில் ஒரு சூப்பர் ஹியூமன் (சூப்பர் பவர்) பலம் பொருந்திய ஒருவர் இருப்பதாக தகவல்கள் சேகரித்து செல்கிறார்.

சூப்பர் ஹியூமன் (சூப்பர் பவர்) பலம் உடைய சத்யராஜ், மனிதாபிமானமற்ற மனிதனாக வாழ்ந்து வருகிறார். சத்யராஜ் ஒரு அறிவியல் சோதனையில் சிக்கிய காரணத்தால் அவருக்கு இந்த சூப்பர் பவர் கிடைத்துள்ளது. அது என்ன?

வசந்த் ரவிக்கும் சத்யராஜுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதே இப்படத்தின் கதை. க்ளைமாக்ஸில் சத்யராஜின் தலைவிதியை தீர்மானிக்கும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+