twitter

    எக்ஸ் மென்: டார்க் பீனிக்ஸ் கதை

    எக்ஸ் மென்: டார்க் பீனிக்ஸ் ஹாலிவுட் இயக்குனரான சிமோன் கின்பெர்க் இயக்கத்தில் ஜேம்ஸ் மாக்கவோய், மைக்கல் பாஸ்பெந்தர், ஜெனிபர் லாரன்ஸ் நடிக்கும் சூப்பர் ஹீரோஸ் திரைப்படம். இத்திரைப்படத்தினை ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரும் இப்பட இயக்குனருமான சிமோன் கின்பெர்க் தயாரிக்க, ஒளிப்பதிவாளர் மாவோரோ ஃபியோர் மற்றும் திரைப்பட தொகுப்பாளர் லீ ஸ்மித் பணியில், இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மர் இசையமைத்துள்ளார்.
     
    தயாரிப்பு
    பல சூப்பர் ஹீரோஸ் கதாபாத்திரங்களை உள்ளடக்கிய மார்வெல் காமிக்ஸ் அடிப்படையில் உருவான இத்திரைப்படத்தினை 20த் செண்ட்சூரி பாக்ஸ் மற்றும் மார்வெல் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்தினை வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.
     
    மார்வெல்: (எக்ஸ்-மென் காமிக்ஸ்)
    இத்திரைப்படமானது மார்வெல் காமிக்ஸ்ஸின் பாத்திரப் படைப்பான எக்ஸ்-மென் கதையின் அடிப்படையானதாகும். மேலும்  இத்திரைப்படம் எக்ஸ்-மென் திரைப்பட வரிசையில் 12வது திரைப்படமும், எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ் என்ற திரைப்பட தொடரின் ஏழாவது பாகமும் ஆகும்.
    தனது உடலின் அணுக்களில் நடக்கும் பரிணாம மாற்றத்தால் ஒரு சக்தியை பெற்று சூப்பர் ஹீரோவாக மாறுகின்றனர் ஒரு சில மனிதர்கள். அத்தகையான மனிதர்கள் ஒன்றிணைந்து ஒரு குழுவாக  உலகத்தை காப்பாற்ற போராடுவதே எக்ஸ்-மென் காமிக்ஸ்.

    கதை
    அமெரிக்காவில் பிறர் மூளையை கட்டுப்படுத்தும் சக்தி கொண்ட ஜேம்ஸ் மாக்கவோய் தலைமையில்  எக்ஸ்-மென் இயங்கி வருகிறது. விண்வெளியில் உள்ள செயற்கைக்கோளில் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடும் விண்வெளி வீரர்களை காப்பாற்ற விண்வெளிக்கு செல்கின்றனர் எக்ஸ்-மென் குழு.

    அங்கு விண்வெளி வீரர்களை காப்பாற்றும் போது ஒரு அபாயகரமான அலை ஒன்று வருகிறது, அனைவரும் விண்கலம் உள்ளே வர, சோபி டர்னர் விண்வெளியில் அந்த அலையிடம் மாட்டிக்கொள்கிறார். பின்னர் சோபி டர்னர் இவருக்கு இருக்கும் சக்தியோடு நெருப்பில் விழுந்து எரிந்தாலும், மீண்டும் பறக்கும் பீனிக்ஸ் பறவை போன்ற அதீத சக்தி வாய்ந்தவளாக மாறுகிறாள்.
     
    பின்னர் ஜேம்ஸ் மாக்கவோய் தனது மூளையின் சக்தியால், சோபி டர்னரின் சக்தியை உணர முயல்கிறார். இவளால் எல்லோருக்கு ஆபத்து என்ற அறிந்து கொள்ளும் ஜேம்ஸ் மாக்கவோய் தனது எக்ஸ்-மென் படையை கொண்டு எப்படி அவளை கட்டுப்படுத்த போகின்றார் என்பது தான் படத்தின் கதை.

    **Note:Hey! Would you like to share the story of the movie எக்ஸ் மென்: டார்க் பீனிக்ஸ் with us? Please send it to us ([email protected]).