யாமிருக்க பயமே 2014ம் ஆண்டு வெளியான தமிழ் மொழி திகில் திரைப்படமகும். இந்த திரைப்படத்தை டிகே இயக்க, கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா மற்றும் கருணாகரன் நடித்துள்ளார்கள்.
தொலைக்காட்சி தொகுப்பாளராக வரும் கிருஷ்ணா தன் காதலியுடன் ஒருவரிடமிருந்து பணத்தை ஏமாற்றி தன் தந்தையின் சொத்தை கைப்பற்ற செல்கிறார். அங்கு கருணாகரன் மற்றும் அவர் சகோதரி ஒவியாவை சந்திக்கின்றனர். அனைவரும் அந்த வீட்டில் தங்குகின்றனர். அங்கு ஒரு ஆவி இருப்பதை கண்டறிகின்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் எவ்வாறு தப்பிக்கின்றனர் என்பது மீதிக் கதை.