twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஒரு ஸ்லோபாய்சன்: சர்ச்சையில் சிக்கிய பாடகர் ஜாவித் அலி

    |

    சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அதிக பாடலை பாடியவர் என்ற பெருமைக்குரிய பாடகர் ஜாவித் அலி ரஹ்மானின் இசையை ஸ்லோபாய்சன் என புகழ்ந்து சிக்கலில் மாட்டியுள்ளார்.

    சிலர் எதையாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என நினைத்து, பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறும் கதை அவ்வப்போது நடப்பது தான். இதுவும் அதே கதை தான்.

    ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை வித்தியாசமாகப் புகழ வேண்டும் என ரூம் போட்டு யோசித்த ஜாவித் அலி, கண்டுபிடித்த வார்த்தை தான் ஸ்லோ பாய்சன். இப்போது அந்த 'ஸ்லோபாய்சன்' அவரையே கொல்ல துரத்துகிரதாம்.

    ’இருக்கானா’ ஜாவித்...

    ’இருக்கானா’ ஜாவித்...

    ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஹிட்டடித்த ‘கஜினி', ‘டெல்லி 6', ‘சிவாஜி', ‘ராவண்', ‘ராஞ்சனா' போன்ற இந்தி படங்களில் பாடி அசத்தியவர் ஜாவித் அலி. தமிழில் ‘மாற்றானில் ‘கால் முளைத்த பூவே', விஜய்யின் ‘நண்பன்‘ படத்தில் ‘இருக்கானா' உள்பட பல பாடல்கள் பாடியுள்ளார் ஜாவித்.

    பாதிப்பு அதிகம்...

    பாதிப்பு அதிகம்...

    இவர் ஏ.ஆர். ரஹ்மான் இசையைப் பற்றி கூறும்போது, 'ரகுமான் இசையில் அமைந்த பாடல்கள் ஸ்லோ பாய்சன் போன்றது. இது உடலையும், மூளையையும் மெதுவாக பாதிக்கும். உறுப்புகள் பாதிக்கப்பட்டபின் அதிலிருந்து தப்பிக்க முடியாது.

    ‘டம் டக்’ பாடல் ஸ்லோபாய்சன்...

    ‘டம் டக்’ பாடல் ஸ்லோபாய்சன்...

    ‘ராஞ்சனா' படத்தில் இடம்பெற்ற ‘டம் டக்‘ பாடல் இந்த வகையை சேர்ந்தது. இளைஞர்கள், ஜோவியலான சண்டை, நட்பு, கொண்டாட்டம் என எல்லாவற்றுக்கும் இந்த பாடல் பொருந்தும்' என ஜாவித் அலி புகழ்ந்தார்.

    வால் போயி கத்தி வந்த கடை...

    வால் போயி கத்தி வந்த கடை...

    ரகுமானை புகழ வேண்டும் என்ற நல்ல நோக்கில் ஜாவித், ஸ்லோபாய்சன் என்று அவரது இசையை வர்ணித்தார். ஆனால், வெகுண்டெழுந்த ரஹ்மான் ரசிகர்களோ ஜாவித்ன் கருத்துகளுக்காக இணையத்தில் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

    English summary
    "Rahman sir's music is like a slow poison. It just grows. The melody created by him is just amazing. We have played a lot with the words. You will also find a Banarasi touch in the song so the three things combined together is just amazing," singer Javid Ali says.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X