உதயநிதி சொன்னாரே, ஆனால் அதுக்குள்ள இப்படி நடந்துடுச்சே: சென்றாயன் கவலை
Recommended Video

சென்னை: கருணாநிதி பற்றி பேசிய சென்றாயன் தனது ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது என்று கூறி வருத்தப்பட்டார்.

பிக் பாஸ் 2 வீட்டில் கலைஞர் கருணாநிதியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து வைத்திருந்தனர். புகைப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து போட்டியாளர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
[கோபம் வருகிற மாதிரி காமெடி பண்ணாதீங்க சென்றாயன், நித்யா இதெல்லாம் டூ டூ மச் #BiggBoss2Tamil]
சில போட்டியாளர்கள் கருணாநிதி பற்றி பேசினார்கள். கருணாநிதி வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்துள்ளோம் என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது என்று பொன்னம்பலம், தாடி பாலாஜி ஆகியோர் தெரிவித்தனர்.
[யாஷிகாவிடம் 'ஐ லவ் யூ' சொன்ன சென்றாயன், செருப்பால் அடிப்பேன் என்ற மகத் ]
சென்றாயன் பேசும்போது கூறியதாவது,
நான் கலைஞர் தாத்தாவை ஒரு முறை கூட நேரில் பார்த்தது இல்லை. சமீபத்தில் உதயநிதி சாரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் நான் சொன்ன முதல் வார்த்தையே, கலைஞர் தாத்தாவை ஒரேயொரு முறை நேரில் பார்க்க வேண்டும் என்பது தான். கண்டிப்பாக உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்றார். அதன் பிறகு தான் இங்கு வந்தேன். இதற்கு அப்புறம் அவரை எப்படி பார்க்கப் போகிறேன் என்று தெரியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார்.
[பிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன் #BiggBoss2Tamil]


Click it and Unblock the Notifications