»   »  பிருந்தா பரேக்.. தனுஷ் 'பிரேக்'!

பிருந்தா பரேக்.. தனுஷ் 'பிரேக்'!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
பொல்லாதவன் படத்தில் தனுஷுடன் இணைந்து, 'பசும்' புயல் பிருந்தா பரேக் ஜில் ஜில் பாட்டுக்கு ஜல் ஜல் ஆட்டம் போட்டிருக்கிறாராம்.

ரஜினி நீண்ட காலத்திற்கு முன்பு நடித்த பொல்லாதவன் சூப்பர் ஹிட் படமானது. அப்படத்தின் பெயரை மட்டும் எடுத்துக் கொண்டு 'மாப்பிள்ளை' தனுஷ் நடிக்க மீண்டும் பொல்லாதவன் உருவாகியுள்ளது.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முன்னாள் குத்து ரம்யா (இப்போது திவ்யா) திறமை காட்டி நடித்துள்ளார். கிளாமரிலும் நல்ல தாராளம் காட்டி அசத்தியுள்ளார். இளம் இசைப் புயல் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் சிங்கிள் பாட்டுக்கு நல்ல ஆட்டக்காரியாக தேடிக் கொண்டிருந்தனர். ரகசியாவைப் பார்த்தனர், பார்த்த முகமாக இருக்குமே வேண்டாம் என்று விட்டு விட்டனர். முமைத்கானை யோசித்துள்ளனர். தனுஷுடன் ஆடினால் அக்கா போலத் தெரிவார் என்பதால் விட்டு விட்டனர். ராக்கி சாவந்த் வரை யோசித்துப் பார்த்தும் ஒருத்தரும் தேறவில்லை.

இந்த நிலையில்தான் திருடிய இதயத்தை, மன்மதன், போக்கிரி ஆகிய படங்களில் ஆட்டம் போட்டு அசத்தியிருந்த பிருந்தா பரேக் சரியாக வருவார் என்ற அபிப்பிராயத்திற்கு வந்தனர். தனுஷுக்கும் பரேக்குடன், பிரேக் ஆட சம்மதம் இருக்கவே, பரேக்கைப் பிடித்து ஆட வைத்து விட்டனர்.

யுகபாரதி எழுதிய அலிபாபா தங்கம் யாரும் உரசாத தங்கம் என்று ஆரம்பிக்கும் பாடலுக்கு பச்சைப் பசேல் என ஆட்டம் போட்டுள்ளனராம் பிருந்தாவும், தனுஷும். எதிர்பார்த்ததை விட படு அமர்க்களமாக பாடல் வந்துள்ளதால், ஒட்டுமொத்த படக் குழுவுமே ஜாலியாகி விட்டதாம்.

வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவான பொல்லாதவன், தீபாவளிக்கு விருந்து படைக்க வருகிறது.

Read more about: brindha pare

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil