twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வராத படங்கள்:ரூ. 50 கோடி முடக்கம்! அல்டிமேட் ஸ்டார் அஜீத் முதல் அட்டகாச நாயகன் ஸ்ரீகாந்த் வரை பலர் நடித்துள்ளபல்வேறு படங்கள் பற்பல சிக்கலில் சிக்கித் தவிப்பதால் கோலிவுட்டில் ரூ. 50 கோடிஅளவுக்கு முடங்கிப் போயுள்ளதாம். பிரமாண்ட பூஜை, தடபுடல் ஷூட்டிங், எல்லாம் முடிந்த பின்னர் படப்பெட்டியைலேபிலிருந்து வெளியே கூட கொண்டு வர முடியாத அளவுக்கு பைனான்ஸ்பஞ்சாயத்து என்பது கோலிவுட்டில் இப்போது வாடிக்கையாகி வருகிறது.பெரிய நடிகரான கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படமே ஏகப்பட்டசிக்கலில் சிக்கி இப்போது தான் தியேட்டர்களை பார்க்க முடிந்துள்ளது. ஆனால்அஜீத்தின் காட்பாதர், ஸ்ரீகாந்த்தின் சதுரங்கம், சத்யராஜின் சிவலிங்கம் ஐ.பி.எஸ்,விமலா ராமன் நடிக்கும் கே.பாலச்சந்தரின் பொய், குர்லின் சோப்ரா-சோனிகா-பிரவீன்காந்த்நடித்துள்ள துள்ளல் என ஏகப்பட்ட படங்கள் முழுமையாக முடிந்தும் முடங்கிப் போய்க்கிடக்கின்றன.இதனால் மட்டும் ரூ. 75 கோடி அளவுக்கு பணம் முடங்கிக் கிடக்கிறதாம்.இப்படங்கள் ரிலீஸ் ஆகாமால் கிடப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பணப்பிரச்சினை தான் பொதுவான காரணமாக இருக்கிறது.திட்டமிட்டதை விட கூடுதல் பட்ஜெட் ஆனதால் அதிக வட்டிக்குப் படம் எடுத்துவிட்டு பைனான்சியருக்கு பணத்தைத் திருப்ப முடியாமல் தயாரிப்பாளர்கள்திணறுவதால் தான் இந்தப் படங்கள் வெளி வர முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன.இந்தப் பஞ்சாயத்துக்கு முடிவுகட்ட தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கையில்இறங்கியுள்ளது. இதுகுறித்து சங்கத் தலைவர் ராம.நாராயணன் கூறுகையில்,வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம் என பல்வேறுசங்கங்களையும் கலந்து பேசி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.எங்களது நடவடிக்கையின் பலனாக சில படங்கள் வெளியாகியுள்ளன. மற்றபடங்களையும் விரைவில் வெளியே கொண்டு வர தொடர்ந்து முயற்சிப்போம்என்றார்.இது எடுத்தும் வர முடியாத படங்களின் கதை. சில பிரபல நடிகர்கள் நடித்து வரும்படங்களை எடுக்கவே முடியாத அளவுக்கு பாதியில் தொக்கி நின்கின்றன. அந்தப்பட்டியலும் நீளம் தான்.வரவு எட்டணா, செலவு பத்தணா என்பார்கள். அது கோலிவுட்டுக்கு ரொம்பப்பொருந்தும்!

    By Staff
    |

    அல்டிமேட் ஸ்டார் அஜீத் முதல் அட்டகாச நாயகன் ஸ்ரீகாந்த் வரை பலர் நடித்துள்ளபல்வேறு படங்கள் பற்பல சிக்கலில் சிக்கித் தவிப்பதால் கோலிவுட்டில் ரூ. 50 கோடிஅளவுக்கு முடங்கிப் போயுள்ளதாம்.

    பிரமாண்ட பூஜை, தடபுடல் ஷூட்டிங், எல்லாம் முடிந்த பின்னர் படப்பெட்டியைலேபிலிருந்து வெளியே கூட கொண்டு வர முடியாத அளவுக்கு பைனான்ஸ்பஞ்சாயத்து என்பது கோலிவுட்டில் இப்போது வாடிக்கையாகி வருகிறது.

    பெரிய நடிகரான கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படமே ஏகப்பட்டசிக்கலில் சிக்கி இப்போது தான் தியேட்டர்களை பார்க்க முடிந்துள்ளது. ஆனால்அஜீத்தின் காட்பாதர், ஸ்ரீகாந்த்தின் சதுரங்கம், சத்யராஜின் சிவலிங்கம் ஐ.பி.எஸ்,விமலா ராமன் நடிக்கும் கே.பாலச்சந்தரின் பொய், குர்லின் சோப்ரா-சோனிகா-பிரவீன்காந்த்நடித்துள்ள துள்ளல் என ஏகப்பட்ட படங்கள் முழுமையாக முடிந்தும் முடங்கிப் போய்க்கிடக்கின்றன.

    இதனால் மட்டும் ரூ. 75 கோடி அளவுக்கு பணம் முடங்கிக் கிடக்கிறதாம்.இப்படங்கள் ரிலீஸ் ஆகாமால் கிடப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பணப்பிரச்சினை தான் பொதுவான காரணமாக இருக்கிறது.

    திட்டமிட்டதை விட கூடுதல் பட்ஜெட் ஆனதால் அதிக வட்டிக்குப் படம் எடுத்துவிட்டு பைனான்சியருக்கு பணத்தைத் திருப்ப முடியாமல் தயாரிப்பாளர்கள்திணறுவதால் தான் இந்தப் படங்கள் வெளி வர முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன.

    இந்தப் பஞ்சாயத்துக்கு முடிவுகட்ட தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கையில்இறங்கியுள்ளது. இதுகுறித்து சங்கத் தலைவர் ராம.நாராயணன் கூறுகையில்,வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம் என பல்வேறுசங்கங்களையும் கலந்து பேசி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    எங்களது நடவடிக்கையின் பலனாக சில படங்கள் வெளியாகியுள்ளன. மற்றபடங்களையும் விரைவில் வெளியே கொண்டு வர தொடர்ந்து முயற்சிப்போம்என்றார்.

    இது எடுத்தும் வர முடியாத படங்களின் கதை. சில பிரபல நடிகர்கள் நடித்து வரும்படங்களை எடுக்கவே முடியாத அளவுக்கு பாதியில் தொக்கி நின்கின்றன. அந்தப்பட்டியலும் நீளம் தான்.

    வரவு எட்டணா, செலவு பத்தணா என்பார்கள். அது கோலிவுட்டுக்கு ரொம்பப்பொருந்தும்!

      Read more about: kollywood in bad shape
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X