twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரகாஷ்ராஜ்: வித்தியாச மனிதர் தமிழ் சினிமாக்காரர்களிலேயே பிரகாஷ் ராஜ் கொஞ்சம் வித்தியாசமானவர். நடிப்பில் புதுப் பரிமாணம் காட்டுவதில்வல்லவரான இவர் நன்றி மறக்காத மனிதர்களில் ஒருவர்.கர்நாடகத்தைச் சேர்ந்த பிரகாஷ் ரய் தான் தமிழுக்கு வந்தபோது பிரகாஷ் ராஜ் ஆக்கப்பட்டார். கன்னட திரையுலகில் தமிழ்சினிமாவுக்கு எதிரான குரல் எழும்பும்போதெல்லாம் அது சரியல்ல என்பதை தைரியமாக சொன்ன கலைஞன். கன்னடசினிமாவில் மெச்சூரிட்டி பத்தாது என்று வெளிப்படையாக பேசியவர்.வில்லன், குணச்சித்திரம் என எந்த வேடத்தில் வந்தாலும், துக்கடா ரோலைக் கொடுத்தாலும், தனது பாணி முத்திரையைப்பதிக்கத் தவறாதவர். டப்பாக் கதையான கில்லி படத்தை தனது அட்டகாசமான நடிப்பினால் தூக்கி நிறுத்தியவர் பிரகாஷ் ராஜ்தான்.வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் கமலுக்கு நிகராக திறமை காட்டி கலக்கியிருந்தார். ஐயாவில் சரத்குமாரை விட நடிப்பில்தூள் கிளப்பியிருப்பார். நடிகராக மட்டுமல்லாமல், நல்ல படத் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார் பிரகாஷ் ராஜ். சிறந்த துணை நடிகர் (இருவர்), சிறந்த படம் (அந்தப்புரம்) என இரண்டு முறை தேசிய விருது பெற்ற பிரகாஷ் ராஜ் தெலுங்கில்ஏகத்துக்கும் டிமாண்ட் செய்து பணம் வாங்குகிறார். தமிழில் சம்பளத்தில் விட்டுக் கொடுத்துவிடும் இவர், தெலுங்கும் ஈட்டும்பணத்தில் தமிழில் நல்ல படங்களை எடுத்து வருகிறார்.அதில் முக்கியமானவை தயா, அழகிய தீயே ஆகியவை. தாய் மொழி கன்னடமாக இருந்தாலும், தனக்கு வெற்றியையும்,வாழ்க்கையையும், பேரையும், புகழையும் கொடுத்தது தமிழ் தான் என்பதை பகிரங்கமாக கூறிக் கொள்ள பயப்படாதவர்.தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி முகம் கொடுத்த கே.பாலச்சந்தரை வைத்து பொய் என்ற படத்தை உருவாக்கி வருகிறார்பிரகாஷ் ராஜ். பாலசந்தர் தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக ரொம்பவும் சிரமமப்பட்டு வெற்றிகண்டிருக்கிறார்.அத்தோடு, கண்டநாள் முதல் என்ற இன்னொரு படத்தையும் தரமாக உருவாக்கி வருகிறார். விஷயம் என்னவென்றால் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் பிரகாஷ் ராஜ். இந்த ஆண்டு தேசிய அளவில்சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருது பெற்ற, தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களைப் பாராட்டும் விதமாக ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.சிறந்த படமாக தேர்வு பெற்றுள்ள ஆட்டோகிராப் படத்தை இயக்கிய சேரன், சிறந்த நடன ஆசிரியராக விருது பெற்றுள்ள பிரபுதேவா, சிறந்த பின்னணிப் பாடகியாக தேர்வு பெற்றுள்ள சித்ரா ஆகியோரை வரும் 14ம் தேதி சென்னையில் கெளரவப்படுத்தும்வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள பிரகாஷ் ராஜ்,இது எனது ஆத்ம திருப்திக்காக மட்டுமல்ல, விருது பெற்றவர்களுக்கு நம்மால் ஆன சின்ன கெளவரம் என்று பெருமிதத்தோடுகூறுகிறார்.நமது வீட்டில் ஏதாவது சந்தோஷம் நடந்தால் அதைக் கொண்டாடுவோம் இல்லையா, அது போலத்தான் இதுவும். எனதுசினிமாக் குடும்பத்தில் சிலர் விருது பெற்றுள்ளார்கள். அவர்களை நான் பாராட்டப் போகிறேன். அவர்களது திறமைக்குக்கிடைத்த பரிசை நாம் பாராட்டியே ஆக வேண்டும் என்கிறார் பிரகாஷ் ராஜ்.முன்னணியில் இருக்கும் ஒரு நடிகர், சக கலைஞர்களைப் பாராட்டி தனது செலவில் இதுபோல விழா நடத்துவது தமிழ்த்திரையுலகில் இதுவேமுதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த பாராட்டு நிகழ்ச்சியின்போதே தனது கண்டநாள் முதல் படத்தின்பாடல் கேசட்டுகளையும் வெளியிடுகிறார் பிரகாஷ் ராஜ்.கண்டநாள் முதல் படத்தில் கார்த்திக், பிரசன்னா, லைலா, ரேவதி, லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ரேவதிக்கும், லட்சுமிக்கும்பிரமாதமான ரோல், இரண்டு பேருமே தங்களது அனுபவத்தைக் கொண்டு மிக அற்புதமாக நடித்து வருகிறார்களாம்.இந்தப் படத்தில் பி.சி.ஸ்ரீராம் நீண்ட நாளைக்குப் பிறகு இந்தப் படத்தில் கேமராவைக் கையாண்டிருக்கிறார். மணிரத்தினத்திடம் உதவியாளராக இருந்த பிரியா தான் இப் படத்தை இயக்குகிறார்.நிஜமாகவே வித்தியாசமான மனிதர் தான் பிரகாஷ் ராஜ்.

    By Staff
    |

    தமிழ் சினிமாக்காரர்களிலேயே பிரகாஷ் ராஜ் கொஞ்சம் வித்தியாசமானவர். நடிப்பில் புதுப் பரிமாணம் காட்டுவதில்வல்லவரான இவர் நன்றி மறக்காத மனிதர்களில் ஒருவர்.

    கர்நாடகத்தைச் சேர்ந்த பிரகாஷ் ரய் தான் தமிழுக்கு வந்தபோது பிரகாஷ் ராஜ் ஆக்கப்பட்டார். கன்னட திரையுலகில் தமிழ்சினிமாவுக்கு எதிரான குரல் எழும்பும்போதெல்லாம் அது சரியல்ல என்பதை தைரியமாக சொன்ன கலைஞன். கன்னடசினிமாவில் மெச்சூரிட்டி பத்தாது என்று வெளிப்படையாக பேசியவர்.

    வில்லன், குணச்சித்திரம் என எந்த வேடத்தில் வந்தாலும், துக்கடா ரோலைக் கொடுத்தாலும், தனது பாணி முத்திரையைப்பதிக்கத் தவறாதவர். டப்பாக் கதையான கில்லி படத்தை தனது அட்டகாசமான நடிப்பினால் தூக்கி நிறுத்தியவர் பிரகாஷ் ராஜ்தான்.

    வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் கமலுக்கு நிகராக திறமை காட்டி கலக்கியிருந்தார். ஐயாவில் சரத்குமாரை விட நடிப்பில்தூள் கிளப்பியிருப்பார். நடிகராக மட்டுமல்லாமல், நல்ல படத் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார் பிரகாஷ் ராஜ்.


    சிறந்த துணை நடிகர் (இருவர்), சிறந்த படம் (அந்தப்புரம்) என இரண்டு முறை தேசிய விருது பெற்ற பிரகாஷ் ராஜ் தெலுங்கில்ஏகத்துக்கும் டிமாண்ட் செய்து பணம் வாங்குகிறார். தமிழில் சம்பளத்தில் விட்டுக் கொடுத்துவிடும் இவர், தெலுங்கும் ஈட்டும்பணத்தில் தமிழில் நல்ல படங்களை எடுத்து வருகிறார்.

    அதில் முக்கியமானவை தயா, அழகிய தீயே ஆகியவை. தாய் மொழி கன்னடமாக இருந்தாலும், தனக்கு வெற்றியையும்,வாழ்க்கையையும், பேரையும், புகழையும் கொடுத்தது தமிழ் தான் என்பதை பகிரங்கமாக கூறிக் கொள்ள பயப்படாதவர்.

    தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி முகம் கொடுத்த கே.பாலச்சந்தரை வைத்து பொய் என்ற படத்தை உருவாக்கி வருகிறார்பிரகாஷ் ராஜ். பாலசந்தர் தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக ரொம்பவும் சிரமமப்பட்டு வெற்றிகண்டிருக்கிறார்.

    அத்தோடு, கண்டநாள் முதல் என்ற இன்னொரு படத்தையும் தரமாக உருவாக்கி வருகிறார்.


    விஷயம் என்னவென்றால் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் பிரகாஷ் ராஜ். இந்த ஆண்டு தேசிய அளவில்சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருது பெற்ற, தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களைப் பாராட்டும் விதமாக ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

    சிறந்த படமாக தேர்வு பெற்றுள்ள ஆட்டோகிராப் படத்தை இயக்கிய சேரன், சிறந்த நடன ஆசிரியராக விருது பெற்றுள்ள பிரபுதேவா, சிறந்த பின்னணிப் பாடகியாக தேர்வு பெற்றுள்ள சித்ரா ஆகியோரை வரும் 14ம் தேதி சென்னையில் கெளரவப்படுத்தும்வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள பிரகாஷ் ராஜ்,

    இது எனது ஆத்ம திருப்திக்காக மட்டுமல்ல, விருது பெற்றவர்களுக்கு நம்மால் ஆன சின்ன கெளவரம் என்று பெருமிதத்தோடுகூறுகிறார்.

    நமது வீட்டில் ஏதாவது சந்தோஷம் நடந்தால் அதைக் கொண்டாடுவோம் இல்லையா, அது போலத்தான் இதுவும். எனதுசினிமாக் குடும்பத்தில் சிலர் விருது பெற்றுள்ளார்கள். அவர்களை நான் பாராட்டப் போகிறேன். அவர்களது திறமைக்குக்கிடைத்த பரிசை நாம் பாராட்டியே ஆக வேண்டும் என்கிறார் பிரகாஷ் ராஜ்.

    முன்னணியில் இருக்கும் ஒரு நடிகர், சக கலைஞர்களைப் பாராட்டி தனது செலவில் இதுபோல விழா நடத்துவது தமிழ்த்திரையுலகில் இதுவேமுதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த பாராட்டு நிகழ்ச்சியின்போதே தனது கண்டநாள் முதல் படத்தின்பாடல் கேசட்டுகளையும் வெளியிடுகிறார் பிரகாஷ் ராஜ்.

    கண்டநாள் முதல் படத்தில் கார்த்திக், பிரசன்னா, லைலா, ரேவதி, லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ரேவதிக்கும், லட்சுமிக்கும்பிரமாதமான ரோல், இரண்டு பேருமே தங்களது அனுபவத்தைக் கொண்டு மிக அற்புதமாக நடித்து வருகிறார்களாம்.

    இந்தப் படத்தில் பி.சி.ஸ்ரீராம் நீண்ட நாளைக்குப் பிறகு இந்தப் படத்தில் கேமராவைக் கையாண்டிருக்கிறார். மணிரத்தினத்திடம் உதவியாளராக இருந்த பிரியா தான் இப் படத்தை இயக்குகிறார்.

    நிஜமாகவே வித்தியாசமான மனிதர் தான் பிரகாஷ் ராஜ்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X