»   »  பாடலாசிரியை கை பிடித்த டைரக்டர்!

பாடலாசிரியை கை பிடித்த டைரக்டர்!

Subscribe to Oneindia Tamil

சந்தியா, பாவனா, பரத் நடித்துள்ள கூடல் நகர் படத்தின் இயக்குனர் சீனு ராமசாமியும், அந்தப் படத்தின்பாடலாசிரியை தேன்மொழியும் சமீபத்தில் படு ரகசியமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பெருமாள்கோவிலில் வைத்து கல்யாணம் செய்து கொண்டார்களாம்.

தெக்கத்திச் சீமையைச் சேர்ந்தவர், அதாவது தேனி பக்கத்தை சொந்த ஊராகக் கொண்டவர் தேன்மொழி.மதுரைக்காரர் சீனு ராமசாமி. கூடல் நகர் படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் பாடல்கள் எழுதியுள்ளார் தேன்மொழி. அப்போது அகஸ்மாத்தாக சீனுவும், தேனுவும் நட்பாகப்பழக அது கூடலாகி, காதலாகிப் போனதாம்.

இந்த விஷயம் பாரதிராஜா காதுக்குப் போனதாம். இங்கே ஒரு பிளாஷ்பேக். தேன்மொழி இயல்பில் கவிதாயினி.அவரது முதல் படைப்பு இசை இல்லாத இலை இல்லை என்ற கவிதை நூல். பிறகு அநாதி காலம் என்றதொகுப்பை வெளியிட்டார்.

அவரது திறமையை உணர்ந்த பாரதிராஜா தன்னுடைய உதவி இயக்குநராக தேன்மொழியை சேர்த்துக்கொண்டார். ஈர நிலம் படத்தில் வசனம், பாடல் எழுதினார் தேன்மொழி. கண்களால் கைது செய் படத்திலும் உதவிஇயக்குநராக தொடர்ந்தார்.

பாடல் எழுதுவதே இலக்கு என்றாலும் சினிமாவின் ஒரு துறையில் நுழைந்து மறு துறையில் கால் பதிப்பதற்குஅவர் யோசிக்கவில்லை. உதவி இயக்குநராக திறம்பட செயல்பட்டு பாரதிராஜாவின் பாராட்டை பெற்றார்.

தேன்மொழியின் முகம் திரையுலகில் அறியப்பட, சுஹாசினி இயக்கத்தில் உருவான கி.ராஜநாராயணனின்கதையான காய்த்த மரம் என்ற டெலி பிலிமாக மாறியபோது அதில் வசனம் தேன்மொழியைத் தான் வசனம்எழுத வைத்தார் சுஹாசினி. அத்தோடு அந்த டெலிபிலிமில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.

சிம்புவின் சரவணா படத்திலும் தேன் உதவி இயக்குநராக இருந்தார். இப்படி வசனம், பாடல், உதவி இயக்குநர்என பல அவதாரம் எடுத்து அசத்திய தேன் மொழி, கூடல் நகர் படத்தில் 2 பாடல்களை எழுதிக் கொடுத்தபோதுசீனு படித்து பரவசப்பட்டார்.

அந்தப் பரவசம் பரவி, நட்பாக விரவி, காதலாக நிலை பெற்றதாம். இவர்களது காதலை அறிந்த பாரதிராஜாஇருவரையும் கூப்பிட்டு ஆசிர்வதித்து, கல்யாணம் செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தினாராம்.

இதையடுத்து படு ரகசியமாக கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி வளசரவாக்கத்தில் உள்ள வெங்கடேச பெருமாள்கோவிலில் வைத்து மாலை மாற்றி, தாலி கட்டி கல்யாணம் முடிந்ததாம்.

கோலிவுட்டில் யார் காதிலும் படாமல் திருமணத்தில் இருதரப்பு வீட்டார் மட்டுமே கலந்து கொண்டனராம். கூடல்நகர் ரிலீஸாகும்போது சொல்லலாம் என்று இருந்தோம். அதற்குள் மேட்டர் கசிந்து விட்டது என்கிறார் புதுப்பெண் தேன்மொழி.

தேன்மொழி ஒரு நல்ல காரியத்தையும் செய்து வருகிறார். அதாவது, உடல் ஊனமுற்ற ஒரு சிறுமியை தத்தெடுத்துவளர்த்து வருகிறாராம்.

நிச்சயம் பாராட்டுவோம், வாழ்த்துவோம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil