twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரோஜாப் பூவின் முதல் வாசனை... ஓ போடு பாடலை எழுதியற்காக வருத்தப்படுகிறேன், அதை நான் எழுதியிருக்கக்கூடாது என்று ரொம்ப லேட்டாக வருத்தப்படுகிறார் கவிப் பேரரசு வைரமுத்து.ஏவி.எம். நிறுவனத் தயாரிப்பில் வெளியான ஜெமினி, விக்ரமின் திரையுலகவாழ்க்கையில் மிகப் பெரிய மைல்கல்லாக அமைந்தது. அந்தப் படத்திற்குப்பிறகுதான் அவர் ஆக்ஷன் ஹீரோவாகவும் உயர்ந்தார். விக்ரமின் மார்க்கெட்டைஉச்சத்திற்குக் கொண்டு போன படம் அது. கிரணுக்கும் வாழ்வு தந்தது.அந்தப் படத்தில் இன்னொரு விசேஷம் இருந்தது. அது ஓ போடு பாடல்.பட்டிதொட்டியெங்கும் ரொம்ப நாளாக பட்டையைக் கிளப்பிய பாடல்தான்.வைரமுத்துவின் வைர வரிகளில் உருவான அப்பாடலின் அர்த்தம் இன்று வரையாருக்கும் புரியவில்லை என்பது இன்னொரு விசேஷம்.இபபோது ஓ போடு பாடலை எழுதியதற்காக வருத்தப்படுவதாகக் கூறியுள்ளார்வைரமுத்து.இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை மட்டும் வைத்து உருவாக்கப்பட்டுள்ள பை 2படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். இதில் சுனிதா தனது கிளாமரால்அதகளம் பண்ணியிருக்கிறார்.இந்தப் படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் வருத்தம்கலந்த பேச்சிலிருந்து சில பகுதிகள்:பாடல் வெறும் ஓசைகளின் ஊர்வலமாக விடுவது நம்மில் யாருக்கும் உடன்பாடுஇல்லை. ஜெமினி படத்துக்காக ஓ போடு என்று ஒரு பாடல் எழுதினேன். அதற்காகஇப்போது வருத்தப்படுகிறேன்.நான் தவறு செய்து விட்டேனோ என்று அஞ்சுகிறேன். இன்று படங்களில் எல்லாபாடல்களுமே அந்த வகையான பாடல்களாகி விட்டன. இந்த நிலை மாற வேண்டும்.பை 2 படத்தில்அத்தனை பாடல்களையுமே மென்மையாக அமைத்திருக்கிறோம்.ரோஜாப் பூவின் முதல் வாசனை .. தூங்கி வழிகின்ற காற்றை எழுப்புதே என்றஇதமான ஒரு பாடல் இதில் இருக்கிறது.நுழையும்போது காற்றாய் வந்தேன் .. போகும்போது இசையாய்ச் செல்வன் என்றும்எழுதியிருக்கிறேன்.தமிழ்த் திரையுலகில் ஒரு தேக்கம் இருக்கிறது. அது மாற்றத்தை வேண்டி நிற்கிறது.சலித்துப் போன கதைகள்-புளித்துப் போன உள்ளடக்கங்கள்- கூறியது கூறும்குற்றங்கள்.. இவற்றால் தமிழ் திரையுலகம் தளர்ச்சி கண்டிருக்கிறது.புதிய கதைகளையும், புதிய தளங்களையும் தேடி தமிழ்த் திரையுலகம் நகர வேண்டும்.உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. வாழ்வியல் எண்ணங்களும், ஏற்பாடுகளும்,மதிப்பீடுகளும் மாறிக் கொண்டேயிருக்கிறது. வாழ்வின் நிழல்தான் திரைப்படம்என்றால் மாறி வரும் வாழ்வியலுக்கு ஏற்ப திரைப்படம் மாற வேண்டுமா,இல்லையா?படங்களைப் பார்த்து படம் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வாழ்க்கையைப் பார்த்துதிரையுலகம் வடிவம் பெற வேண்டும். நல்ல இலக்கியங்களும், நாவல்களும் படமாகவேண்டும். எதைச் சொல்வது என்பதைப் போலவே எப்படிச் சொல்வது என்பதிலும்கவனம் வேண்டும்.ஒருவனுக்கு ஒருத்தி என்று பேசும் ராமாயணமும் ரசிக்கப்பட்டது. ஐவருக்கு ஒருத்திஎன்ற மகாபாரதமும் ரசிக்கப்பட்டது. இரண்டுமே இரு வேறு நிலைப்பாடுகளைக்கொண்டவை என்றாலும், சொல்லப்பட்ட விதத்தால் இரண்டுமேஇதிகாசங்களாகியுள்ளன.எனவே எதைச் சொல்கிறோம் என்பதை விட எப்படிச் சொல்கிறோம் என்பதுதான்முக்கியம் என்றார் வைரமுத்து.தவறுக்கு வருந்துவதற்கும், வருத்தம் தெரிவிப்பதற்கும் கூட தைரியம் நிறையவேண்டும். அது இந்த வடுகப்பட்டிக்காரருக்கு நிறையவே இருப்பது சந்தோஷம்.

    By Staff
    |

    ஓ போடு பாடலை எழுதியற்காக வருத்தப்படுகிறேன், அதை நான் எழுதியிருக்கக்கூடாது என்று ரொம்ப லேட்டாக வருத்தப்படுகிறார் கவிப் பேரரசு வைரமுத்து.

    ஏவி.எம். நிறுவனத் தயாரிப்பில் வெளியான ஜெமினி, விக்ரமின் திரையுலகவாழ்க்கையில் மிகப் பெரிய மைல்கல்லாக அமைந்தது. அந்தப் படத்திற்குப்பிறகுதான் அவர் ஆக்ஷன் ஹீரோவாகவும் உயர்ந்தார். விக்ரமின் மார்க்கெட்டைஉச்சத்திற்குக் கொண்டு போன படம் அது. கிரணுக்கும் வாழ்வு தந்தது.

    அந்தப் படத்தில் இன்னொரு விசேஷம் இருந்தது. அது ஓ போடு பாடல்.பட்டிதொட்டியெங்கும் ரொம்ப நாளாக பட்டையைக் கிளப்பிய பாடல்தான்.

    வைரமுத்துவின் வைர வரிகளில் உருவான அப்பாடலின் அர்த்தம் இன்று வரையாருக்கும் புரியவில்லை என்பது இன்னொரு விசேஷம்.


    இபபோது ஓ போடு பாடலை எழுதியதற்காக வருத்தப்படுவதாகக் கூறியுள்ளார்வைரமுத்து.

    இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை மட்டும் வைத்து உருவாக்கப்பட்டுள்ள பை 2படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். இதில் சுனிதா தனது கிளாமரால்அதகளம் பண்ணியிருக்கிறார்.

    இந்தப் படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் வருத்தம்கலந்த பேச்சிலிருந்து சில பகுதிகள்:

    பாடல் வெறும் ஓசைகளின் ஊர்வலமாக விடுவது நம்மில் யாருக்கும் உடன்பாடுஇல்லை. ஜெமினி படத்துக்காக ஓ போடு என்று ஒரு பாடல் எழுதினேன். அதற்காகஇப்போது வருத்தப்படுகிறேன்.


    நான் தவறு செய்து விட்டேனோ என்று அஞ்சுகிறேன். இன்று படங்களில் எல்லாபாடல்களுமே அந்த வகையான பாடல்களாகி விட்டன. இந்த நிலை மாற வேண்டும்.

    பை 2 படத்தில்அத்தனை பாடல்களையுமே மென்மையாக அமைத்திருக்கிறோம்.ரோஜாப் பூவின் முதல் வாசனை .. தூங்கி வழிகின்ற காற்றை எழுப்புதே என்றஇதமான ஒரு பாடல் இதில் இருக்கிறது.

    நுழையும்போது காற்றாய் வந்தேன் .. போகும்போது இசையாய்ச் செல்வன் என்றும்எழுதியிருக்கிறேன்.

    தமிழ்த் திரையுலகில் ஒரு தேக்கம் இருக்கிறது. அது மாற்றத்தை வேண்டி நிற்கிறது.சலித்துப் போன கதைகள்-புளித்துப் போன உள்ளடக்கங்கள்- கூறியது கூறும்குற்றங்கள்.. இவற்றால் தமிழ் திரையுலகம் தளர்ச்சி கண்டிருக்கிறது.

    புதிய கதைகளையும், புதிய தளங்களையும் தேடி தமிழ்த் திரையுலகம் நகர வேண்டும்.


    உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. வாழ்வியல் எண்ணங்களும், ஏற்பாடுகளும்,மதிப்பீடுகளும் மாறிக் கொண்டேயிருக்கிறது. வாழ்வின் நிழல்தான் திரைப்படம்என்றால் மாறி வரும் வாழ்வியலுக்கு ஏற்ப திரைப்படம் மாற வேண்டுமா,இல்லையா?

    படங்களைப் பார்த்து படம் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வாழ்க்கையைப் பார்த்துதிரையுலகம் வடிவம் பெற வேண்டும். நல்ல இலக்கியங்களும், நாவல்களும் படமாகவேண்டும். எதைச் சொல்வது என்பதைப் போலவே எப்படிச் சொல்வது என்பதிலும்கவனம் வேண்டும்.

    ஒருவனுக்கு ஒருத்தி என்று பேசும் ராமாயணமும் ரசிக்கப்பட்டது. ஐவருக்கு ஒருத்திஎன்ற மகாபாரதமும் ரசிக்கப்பட்டது. இரண்டுமே இரு வேறு நிலைப்பாடுகளைக்கொண்டவை என்றாலும், சொல்லப்பட்ட விதத்தால் இரண்டுமேஇதிகாசங்களாகியுள்ளன.

    எனவே எதைச் சொல்கிறோம் என்பதை விட எப்படிச் சொல்கிறோம் என்பதுதான்முக்கியம் என்றார் வைரமுத்து.

    தவறுக்கு வருந்துவதற்கும், வருத்தம் தெரிவிப்பதற்கும் கூட தைரியம் நிறையவேண்டும். அது இந்த வடுகப்பட்டிக்காரருக்கு நிறையவே இருப்பது சந்தோஷம்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X