X
முகப்பு சினி தரவரிசை

Garudan Blockbuster: 10 நாளில் 50 கோடி வசூலித்து ரஜினி படத்தை பின்னுக்கு தள்ளிய கருடன்

Author Sakthi Harinath | Updated: Friday, June 14, 2024, 11:35 AM [IST]

Garudan Blockbuster: 10 நாளில் 50 கோடி வசூலித்து ரஜினி படத்தை பின்னுக்கு தள்ளிய கருடன் - முழு விவரங்கள் இதோ. இந்த பட்டியலில் 2024 மே 31ல் வெளியான கருடன் திரைப்படம் தமிழக பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் சக்க போடு போட்டு வருகிறது. இப்படம் வெளியான 10 நாளில் 50 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த வருடம் 2024ல் வெளியான லால் சலாம் பட மொத்த வசூலையும் இப்படம் முந்தி சாதனை படைத்திருக்கிறது. முழு தகவல்கள் இதோ.


cover image
Video Thumbnail

கருடன் - கருடன்

கருடன் -  இயக்குனர் ஆர் எஸ் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கே குமார் மாற்றம் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வகையில் அதிரடி - திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள 'கருடன்' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர்தர் எ வில்சன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, ரோஷ்ணி ஹரிப்ரியன், ரேவதி சர்மா, மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Video Thumbnail

கருடன் - கருடன் - கதை

தேனி மாவட்டம் கோம்பை என்னும் கிராமத்தில் உயிர் நண்பர்களாக வளர்கின்றனர், ஆதி (சசிகுமார்) & கர்ணா (உன்னி முகுந்தன்). இவர்கள் இணைந்து செங்கல் சூளை தொழில் செய்து வருகின்றனர். கோம்பையில் உள்ள ஒரு அம்மன் கோவில் நிலத்தை அபகரிக்க நினைக்கும் அரசியல்வாதி ஆர் வி உதயகுமார் (சின்ன கவுண்டர் பட இயக்குனர்), மைம் கோபி மற்றும் போலீஸ் அதிகாரி சமுத்திரக்கனி உதவியுடன் தனது திட்டத்தை நகர்த்துகிறார்.


கோவில் பற்றிய அணைந்து பத்திர சான்றிதழ் முழுவதையும் வடிவுக்கரசி குடும்பம் பராமரித்து வருகிறது. இப்படத்தின் நாயகன் சூரி 'சொக்கன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


கர்ணன் (உன்னி முகுந்தன்) சிறுவயதில் ஒரு ஆபத்தில் இருந்து சூரி காப்பாற்ற, அந்த நொடி முதல் சூரி கர்ணனின் நண்பனாகவும், பாதுகாவலனாக மாறுகிறார். மிகுந்த விஸ்வாசத்துடன் இருக்கும் சூரி, கர்ணன்யை பல திசைகளில் இருந்து பாதுகாத்து வருகிறார்.


காலபோக்கில் சூரி - சசி குமார் - உன்னி முகுந்தன் மூவரும் நண்பர்களாக மாறுகின்றனர். இவர்களை தாண்டி கோவில் நிலத்தை அபகரிக்க முடியாமல் இருக்கும் அரசியல்வாதி, சூழ்ச்சி செய்து உன்னி முகுந்தன் - சசி குமார் இடையே இருக்கும் நட்பை உடைக்க திட்டமிட்டு, நண்பர்களை எதிரிகளாக மாற்றுகின்றார்.


தனது மனைவி தூண்டுததால் நண்பன் துரோகியாக மாறுகிறார், உன்னி முகுந்தன். இவர் செய்யும் தவறுகளுக்கு சூரி என்ன செய்கிறார் என்பதே இப்படத்தின் கதை.


தவறென அறிந்தும் உன்னி முகுந்தன் பக்கம் நின்றாரா? சூரி. இல்லை உன்னி முகுந்தனை எதிர்த்து நிற்கிறாரா? என்பதே இப்படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை.

Video Thumbnail

கருடன் - கருடன் - விமர்சனம் & ரேட்டிங்

கருடன் திரைப்படம் தமிழ் சினிமாவில் வெளியான முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. திரைக்கதை, வசனங்கள், நடிப்பு என இப்படம் பெரிய அளவில் ரசிகர்களின் மனதை வென்று புகழ் பெற்றுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் (3.5/5) ரேட்டிங் அளிக்கப்பட்டுள்ளது. கிராமத்து திரைக்கதையில் வெளியான இப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று இந்த ஆண்டின் வெற்றி பட வரிசையில் இணைந்துள்ளது.


Video Thumbnail

கருடன் வசூல் - கருடன் வசூல்

கருடன் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகாமல், சாதாரண படமாக ப்ரொமோட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. விடுதலை படத்தின் மூலம் நாயகனாக நடிக்க தொடங்கிய நகைச்சுவை நடிகர் சூரி, இப்படத்தில் நாயகனாக நடித்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். விமர்சனம் ரீதியாக பிரபலமான இப்படம், அடுத்தடுத்த காட்சிகளில் பலரின் கவனத்தை பெற்று வசூல் ரீதியாக பிரபலமாகி வருகிறது. முதல் நாள் வசூலில் இருந்து மிக கணிசமான வசூலித்து வரும் கருடன் திரைப்படம், தற்போது 45 கோடிகளை கடந்து 50 கோடிகள் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.


Video Thumbnail

லால் சலாம் - லால் சலாம்

லால் சலாம் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், நிரோஷா என பல முன்னணி தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை கிரிக்கெட் விளையாட்டை சார்ந்த திரைக்கதையில் வடிவமைத்து இயக்கியுள்ளார், இயக்குனர். லால் சலாம் படத்தினை தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


லால் சலாம் திரைப்படத்தினை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தமிழ் சினிமா நடிகர் மற்றும் தமிழக அரசியல்வாதி திரு. உதயநிதி ஸ்டாலின் விநியோகம் செய்துள்ளார்.

Video Thumbnail

வசூல் சாதனை - வசூல் சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'லால் சலாம்' திரைப்படம் தமிழ் சினிமாவில் வெளியாகி பலர் மத்தியில் பேசப்பட்டு கொண்டாடப்பட்டது. இப்படம் உலகம் முழுவதும் 36 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது. ரஜினி இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் தோன்றி பின்னர், துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


கருடன் திரைப்படம் வெளியான 10 தினங்களில் 45 - 50 கோடிகள் வசூல் செய்துள்ளது. இப்படம் 50 கோடிகள் வசூல் செய்து ரஜினியின் லால் சலாம் படத்தை பின்னுக்கு தள்ளி, வெற்றி படமாக அவதரித்துள்ளது. சூரி நாயகனாக நடித்துள்ள கருடன், 50 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ள நிலையில், இந்த ஆண்டின் வெற்றி பட பட்டியலில் இடம்பிடித்துள்ளது, சூரியின் கருடன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+