சினி தரவரிசை


Click it and Unblock the Notifications
வடசென்னை 2, கைதி 2 என 2024ல் உருவாகும் 20 தமிழ் பார்ட் 2 திரைப்படங்களின் லிஸ்ட் இங்கு விரிவாக உள்ளன. இந்த பட்டியலில் 2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் உருவாக காத்திருக்கும் பிரபல முன்னணி தமிழ் நடிகர்களின் பார்ட் 2 படங்களின் முழு லிஸ்ட் இந்த பட்டியலில் உள்ளன. இதில் வடசென்னை 2, விடுதலை 2, சர்தார் 2, தீரன் 2, ஜெயிலர் 2, இந்தியன் 2 & இந்தியன் 3 என பல திரைப்படங்கள் உள்ளன. முழு லிஸ்ட் இதோ.
விடுதலை 2 - இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி & சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மக்களின் ஆதரவில் பிரமாண்ட வரவேற்பு பெற்றுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வெளியாக தயாராகி வருகிறது.
அரண்மனை 4 - இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து உருவாகும் 4ஆம் பாக திகில் - ...
இந்தியன் 2 - 1996ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இயக்குனர் ஷங்கர் ஷண்முகம் இயக்கத்தில் கமல் ஹாசன் முன்னணி ...
துப்பறிவாளன் 2, இயக்குனர் மிஸ்க்கின் இயக்கத்தில் 2017ம் ஆண்டு விஷால் நடிப்பில் புலன் விசாரணையை மையப்படுத்திய திரைக்கதையாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ...
டிமான்ட்டி காலனி 2 - இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடித்திருக்கும் திகில் - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை இப்பட இயக்குனர் அஜய் ...
சூது கவ்வும் 2 திரைப்படம் மிர்ச்சி சிவா, ஹரிஷா, ராதா ரவி, கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர், கராத்தே கார்த்தி, ரகு, யோக் ஜேபி, அருள்தாஸ், கல்கி மற்றும் கவி. இதை ...
தனி ஒருவன் 2 இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து எதிர்பார்ப்புக்கும் மீறிய வெற்றியை அளித்த தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்க ...
7ஜி ரெயின்போ காலனி 2 - இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணன் நாயகனாக நடிக்கும் திரைப்படம். இப்படம் முதல் பாகத்தின் கதையம்சத்தில் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது. இப்படம் இந்த ஆண்டு 2024ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாயா ஒன் (மாயவன் 2) இயக்குனர் சி.வி. குமார் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற 'மாயவன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமாக ...
அயலான் 2 - இயக்குனர் ரவிக்குமார் ஆர் இயக்கத்தில் 2024ஆம் ஆண்டு வெளியான அயலான் படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இரண்டாம் பாக படமாகும். இப்படத்தில் முதல் ...
சார்பட்டா 2 (சார்பட்டா பரம்பரை 02) இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை 'நீலம் புரொடக்ஷன்' ...
கைதி 2 - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தனது ட்ரீம் ...
சர்தார் 2 - இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரு வேடங்களில் நடித்து 2022ல் வெளியான சர்தார் படத்தின் தொடர்ச்சியாக உருவாகவிருக்கும் ...
ஜெயிலர் 2 - இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து 2023ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் படமாக கொண்டாடப்பட்ட படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் திரைப்படம். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம் 2 - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், கார்த்தி, சூர்யா என தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படம் 2022ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாக தமிழில் பிரபலமானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு படக்குழு சார்பில் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தீரன் 2 - தமிழ் சினிமா நடிகர் கார்த்தி & இயக்குனர் ஹச் வினோத் கூட்டணியில் உருவான தீரன் (அதிகாரம் 1) திரைப்படத்தின் இரண்டாம் பாக திரைப்படம். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வருவதாக படக்குழு சார்பில் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜிகர்தண்டா 3 - இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா, ஜிகர்தண்டா 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகும் பார்ட் 3 திரைப்படம். இப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டன் மில்லர் 2 - 2024 பொங்கல் பண்டிகைக்கு திரையில் வெளியான தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தின் இரண்டாம் பாக திரைப்படம். இப்படம் விரைவில் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டு உருவாகவுள்ளது.
வடசென்னை 2 - இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வடசென்னை' படத்தின் இரண்டாம் பாக திரைப்படம். இப்படம் விரைவில் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டு தமிழ் சினிமாவில் உருவாகும் என பல நட்சத்திரங்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications