X
முகப்பு சினி தரவரிசை

Maharaja Box Office: முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய மகாராஜா.. எத்தனை கோடிகள் தெரியுமா?

Author Sakthi Harinath | Published: Saturday, June 15, 2024, 03:13 PM [IST]

Maharaja Box Office: முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய மகாராஜா.. எத்தனை கோடிகள் தெரியுமா? - முழு தகவல்கள் இதோ. இந்த பட்டியலில் மகாராஜா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் முழுவதும் விரிவாக உள்ளது. இதில் விஜய் சேதுபதியின் 50வது தமிழ் திரைப்படமான 'மகாராஜா' திரைப்படம் 2024 ஜூன் 14ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. இந்த படம் முதல் நாளில் படைத்த வசூல் சாதனை பற்றிய முழு விவரங்கள் இங்கு உள்ளது.


cover image
Video Thumbnail

மகாராஜா - மகாராஜா

மகாராஜா - இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.


குடும்பங்கள் கண்டு மகிழும் அதிரடி - திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்ரமணியம், சிங்கம் புலி, அபிராமி, பாரதிராஜா என தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்

Video Thumbnail

மகாராஜா - கதை - கதை

விஜய் சேதுபதி கே.கே நகர் பகுதியில் ஒரு சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் பள்ளிக்கரணை பகுதியில் தன் மகளுடன் வசித்து வருகிறார். ஒரு நாள் தனது வீட்டில் இருந்த லட்சுமி-யை காணவில்லை என போலீஸ் ஸ்டேஷன்-க்கு புகார் அளிக்க வரும், விஜய் சேதுபதி பல அவமானங்களை சந்தித்து போலிஸிடம் சில லட்சம் லஞ்சம் தருவதாக டீல் செய்து தனது வீட்டில் காணாமல் போன லட்சுமியை கண்டுபிடிக்க சொல்கிறார். விஜய் சேதுபதியின் டீலுக்காக போலீஸ் அதிகாரி நடராஜன் தனது தேடலை தொடங்குகிறார்.


கதைக்களம் நகர பல விஷயங்கள் வெளிவருகிறது. 15 வருடத்திற்கு முன் அனுராக் காஷ்யப் எலக்ட்ரிகல் தொழில் செய்து வருகிறார். பகல் நேரத்தில் எலக்ட்ரிகல், இரவு நேரத்தில் திருட்டு என செய்து வருகிறார் அனுராக் காஷ்யப். தான் கொள்ளையடிக்க செல்லும் இடங்களில் உள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார், அனுராக் காஷ்யப். ஒரு நாள் போலீஸிடம் சிக்கும் அனுராக் காஷ்யப், இதற்கு காரணம் விஜய் சேதுபதி தான், என தவறாக புரிந்து கொள்கிறார். 15 வருடம் ஜெயில் தண்டனைக்கு பிறகு வெளிவரும் அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதியை தேடி கண்டுபிடித்து அவரை பழிவாங்க துடிக்கிறார். 


விஜய் சேதுபதியின் மனைவி திவ்யா பாரதி ஒரு விபத்தில் சிக்கி உயிரிழக்க, அப்போது அவரது மகளை குப்பை தொட்டியில் போட்டு செல்கின்றனர். விஜய் சேதுபதி தன் மகளுடன் அந்த குப்பை தொட்டியையும் எடுத்து வருகிறார். அந்த குப்பை தொட்டியின் பெயர் தான் லட்சுமி. 


ஜெயிலில் இருந்த வெளிவந்த அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார். பின்னர் விஜய் சேதுபதி குப்பை தொட்டி காணவில்லை என புகார் அளித்து, போலீஸ் கவனத்தை ஈர்த்து, அனுராக் காஷ்யப் கண்டுபிடிக்கிறார். பின் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் ட்விஸ்ட்...


Video Thumbnail

விமர்சனம், ரேட்டிங் - விமர்சனம் & ரேட்டிங்

மகாராஜா திரைப்படம் விமர்சனம் ரீதியாக தமிழ் சினிமா திரைப்பட ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து தடுமாறி வந்த தமிழ் சினிமா படங்கள், தற்போது நல்ல படங்கள் மூலம் மீண்டும் தன்னை நிலைநிறுத்துகிறது. பல இணையதள விமர்சகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மகாராஜா படத்தினை புகழ்ந்து வருகின்றனர். இப்படத்தின் கதைக்களம் மற்றும் திரைக்கதை வடிவமைப்பு என பல விஷயங்கள் அடிப்படையில் இப்படத்திற்கு 4/5 ரேட்டிங் அள்ளிக்கப்பட்டுள்ளது.


Video Thumbnail

முதல் நாள் வசூல் - மகாராஜா - முதல் நாள் வசூல்

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை வென்ற மகாராஜா திரைப்படம், 1400 திரையரங்கிற்கு மேல் திரையில் வெளியாகி சாதனை படைத்துள்ளது. விஜய் சேதுபதியின் எந்த படமும் படைக்காத சாதனையை இப்படம் படைத்து, முதல் நாள் வசூலில் மாஸ் காட்டியுள்ளது. மகாராஜா திரைப்படம் வெளியான முதல் நாள் முடிவில் உலகளவில் 5 கோடிகள் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. மேலும் இந்த வருடம் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் மக்களின் மனதை வென்ற படமாகவும் இப்படம் அமைந்து பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தில் சிங்கநடை போடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+