twitter
    X
    Home சினி தரவரிசை

    தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த கர்நாடகாவைச் சேர்ந்த திரை நட்சத்திரங்கள்

    Author Sakthi Harinath | Updated: Wednesday, May 10, 2023, 10:07 AM [IST]

    தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் கர்நாடகாவை சேர்ந்த பிரபல முன்னணி திரையுலக தமிழ் நட்சத்திரங்களின் பட்டியல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கர்நாடாவில் இருந்து தமிழகம் வந்துள்ள சில முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் கவர்ந்து பிரபலமாகியுள்ள திரையுலக நட்சத்திரங்கள் என இங்கு உள்ளனர். தமிழ் படங்களில் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் மக்களால் அறியப்படும் பிரகாஷ் ராஜ், பிரபு தேவா போன்ற நடிகர்கள் மற்றும் சௌந்தர்யா, ரம்யா போன்ற நடிகைகளும் இந்த பட்டியலில் உள்ளனர். மேலும் அ.தி.மு.க கழக முன்னால் தலைவர் மற்றும் முதலமைச்சரான "அம்மா" ஜெ.ஜெயலலிதாவும் கர்நாடகாவை சேர்ந்த பிரபலம் ஆவார். இந்த பட்டியலில் மக்களால் மிகவும் கொண்டாடப்படும் சில கர்நாடகாவை சேர்ந்த தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் இங்கு உள்ளனர்.

    cover image

    1

    1957-ஆம் ஆண்டு "மாயாபசார்" என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர். பின்னர் "வெண்ணிற ஆடை" என்ற தமிழ் திரைப்படத்தில் நாயகியாக 1965-ஆம் ஆண்டு நடித்து நடிகையாக தமிழில் புகழ் பெற்றுள்ளார். திரைப்படத்தில் நடித்து மக்களின் கவனத்தை கவர்ந்த இவர், அரசியலில் பணியாற்றி பல முறை வெற்றி பெற்றுள்ளார். மேலும் தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க என்ற அரசியல் கழகத்தின் சார்பில் ஆறு முறை முதலமைச்சராக பணியாற்றி புகழ் பெற்றவர்.

    2

    ஒரு பேருந்து நடித்துணராக பணியாற்றி வந்துள்ள இவர், இயக்குனர் பாலசந்தர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பினை பெற்று ஒரு குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லன் நடிகராக தமிழில் அறிமுகமானவர். பின்னர் தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த இவர் நாயகனாக தமிழ் திரைப்படத்தில் நடித்து தற்போது "சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தினை பெற்று புகழ் பெற்றுள்ளார். இவர் கர்நாடகாவில் பெங்களூரை சேர்ந்தவர்.

    3

    கர்நாடகாவில் உள்ள தும்கூர் என்னும் மாவட்டத்தை சேர்ந்த மதுகிரி என்னும் இடத்தினை பிறப்பிடமாய் கொண்டுள்ள இவர், 1981-ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானவர். பின்னர் தமிழ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பினை பெற்று "நன்றி" என்னும் தமிழ் திரைப்படத்தில் 1984-ம் ஆண்டு நடிகர் கார்த்தியுடன் துணை நடிகராக நடித்து பிரபலமானவர். பின்னர் தமிழ் திரைப்படத்தில் தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர் தமிழில் ஒரு முன்னணி நடிகராக உயர்ந்து புகழ் பெற்றுள்ளார்.

    4

    மைக் மோகன் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் பிறந்தவர். இவரது முதல் திரைப்படமானது இயக்குனர் பாலு  மஹேந்திராவின் முதல் திரைப்படமான "கோகிலா" என்னும் கன்னட திரைப்படமாகும். பின்னர் கன்னட மற்றும் மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர், தமிழில் 1980ஆம் ஆண்டு "மூடு பனி" என்னும் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இவர் நடிப்பில் தமிழில் மௌன ராகம், கோபுரங்கள் சாய்வதில்லை போன்ற திரைப்படங்கள் தமிழில் மிக பிரபலமான திரைப்படமாகும். இவர் தமிழ் திரையுலகில் 1990-ஆம் ஆண்டு புகழ் பெற்ற ஒரு முன்னணி நடிகர் ஆவார்.

    5

    பெங்களூரில் பிறந்து திரைத்துறையில் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர், கன்னட திரைப்படங்களில் 1982ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானார். பின்னர் பல கன்னட திரைப்படங்களில் நடித்து வந்துள்ள இவர், 1984ஆம் ஆண்டு பூவிலங்கு என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து ஒரு முன்னணி நடிகராக புகழ் பெற்றுள்ளார்.

    6

    தென்னிந்திய திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் மற்றும் துணை நடிகர் என பல கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவரது பிறப்பிடம் கர்நாடகாவில் மைசூரு நகரம் ஆகும். பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ள இவர், திரைத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் சமூகத்தில் ஒரு அரசியல்வாதியாகவும் பணியாற்றி வருகிறார். 

    7

    கர்நாடாவில் மைசூர் நகரினை சேர்ந்துள்ள இவர், தமிழில் ஒரு நடன ஆசிரியராக பணியாற்றி புகழ் பெற்றவர். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடன ஆசிரியராக பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். இவர் திரைத்துறையில் பணியாற்றி பல  திரைத்துறை சார்ந்த விருதுகளையும், தேசிய அளவில் கலைமாமணி, மாற்று பத்ம ஸ்ரீ விருதினை பெற்றுள்ளார்.

    8

    2004-ஆம் ஆண்டு கண்டி என்னும் கன்னட திரைப்படத்தில் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானாக இவர், தமிழில் 2007-ஆம் ஆண்டு பொல்லாதவன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து புகழ் பெற்றுள்ளார். இவர் கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்று புகழ் பெற்றுள்ளார்.

    9

    1992-ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் நாயகியாக நடித்து அறிமுகமான இவர், தென்னிந்திய மொழி திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் இவர் அரசியலிலும் பணியாற்றி பிரபலமாகியுள்ளார்.

    10

    2003-ஆம் ஆண்டு "அபி" என்னும் கன்னட திரைப்படத்தில் நடித்து அறிமுகமான இவர், தனது நடிப்பினால் அந்த ஆண்டு பிலிம்பேர் விருதினை பெற்று புகழ் பெற்றுள்ளார். பின்னர் 2004-ஆம் ஆண்டு குத்து திரைப்படத்தில் நடித்து தமிழில் பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானார். அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து புகழ் பெற்ற இவர், பின்னர் அரசியலிலும் பணியாற்றி பிரபலமாகியுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X