twitter
    X
    Home சினி தரவரிசை

    ரசிகர்கள் கொண்டாடிய அஜித் குமாரின் டாப் 10 அறிமுக திரைப்பாடல்கள்

    Author Sakthi Harinath | Published: Wednesday, May 4, 2022, 12:52 PM [IST]

    தல போல வருமா முதல் விளையாடு மங்காத்தா வரை ரசிகர்களில் மத்தியில் பிரபலமாகி பலரால் கொண்டாடப்பட்ட நடிகர் அஜித் குமார் படங்களில் உள்ள அவரது அறிமுக பாடல்களின் டாப் 10 அறிமுக பாடல்கள் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் விளையாடு மங்காத்தா, தல போல வருமா, வீர விநாயகா, அதாரு அதாரு, சர்விவா என அஜித் குமாரின் டாப் 10 பிரபல அறிமுக பாடல்கள் உள்ளது.

    cover image

    அட்டகாசம் - தல போல வருமா

    அட்டகாசம் 2004 -ல் இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜித் குமார், பூஜா, கருணாஸ், சுஜாதா, ரமேஷ் கண்ணா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்த நகைச்சுவை அதிரடி திரைப்படம். இப்படத்திற்கு வைரமுத்து பாடல்வரிகளை  எழுத பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

    பில்லா - சேவல் கொடி

    பில்லா 2007-ம் ஆண்டு வெளிவந்த அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்க, அஜித்குமார், நயன்தாரா மற்றும் நமீதா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    ரெட் - கண்ணை கசக்கும் சூரியனோ

    ரெட் 2002 -ஆம் ஆண்டு இயக்குனர் ராம் சத்யா இயக்கத்தில் அஜித், பிரியா கில், மணிவண்ணன், ரகுவரன் மற்றும் பலர் நடித்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்துள்ளார். 

    மங்காத்தா - விளையாடு மங்காத்தா

    மங்காத்தா 2011 ஆகஸ்ட் 31 ல் வெளியான ஒரு தமிழ் அதிரடி திகில் திரைப்படமாகும். இந்தப் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அஜித் குமார், திரிசா, அர்ஜுன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய தயாநிதி அழகிரி தயாரிக்கின்றார்....

    என்னை அறிந்தால் - அதாரு அதாரு

    என்னை அறிந்தால், நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த ஓர் அதிரடி தமிழ்த் திரைப்படமாகும். ஹாரிஸ் ஜயராஜ் இசையமைக்க, டான் மெக்கார்த்தர் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்தை இயக்கியுள்ளார் கெளதம் மேனன். இத்திரைப்படத்திற்கு தாமரை பாடல்வரிகள் அமைத்துள்ளார்.இத்திரைப்படம் முதலில் பெயரிடப்படாமல் தல 55 என்ற பெயரில் பிரபலமானது....

    ஆரம்பம் - அடடட ஆரம்பமே

    ஆரம்பம்  நவம்பர் 2013ல் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம். ஏ. எம். ரத்னம், ஏ. ரகுராம் ஆகியோர் தயாரிக்க விஷ்ணுவர்த்தன் இயக்கும் இத்திரைப்படத்தில் அஜித் குமார், ஆர்யா, நயன்தாரா, டாப்சி பன்னு போன்றோர் முன்னணி வேடங்களில் நடித்தனர். இப்படம் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் திரையிடப்பட்டது. அதாவது 2013 ஆம்...

    தீனா - வத்திக்குச்சி பத்திக்காதுடா

    தீனா 2001 -ம் ஆண்டு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில்,  அஜித் குமார், லைலா மற்றும் சுரேஷ் கோபி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    விவேகம் - சர்விவா

    விவேகம் தமிழில் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள அஜித் குமார் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி காதல் திரைப்படம். இப்படத்தில் அஜித்துடன், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய், தம்பி ராமையா, கருணாகரன், ஆரவ் சௌத்ரி, சுவாமிநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பாடலாசிரியர் விவேக்...

    ஆசை - கொஞ்ச நாள் பொறு

    ஆசை இயக்குனர் வசந்த் இயக்கத்தில், அஜித் குமார், சுவலக்ஷ்மி, பிரகாஷ் ராஜ், ரோகினி நடித்த காதல் அதிரடித் திரைப்படம். இப்படத்திற்கு வாலி மற்றும் வைரமுத்து பாடல்வரிகளை எழுத, தேவா இசையமைத்துள்ளார்.

    வேதாளம் - வீர விநாயகா

    வேதாளம் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், ஸ்ருதி ஹாசன், லக்ஷ்மி மேனன் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள காதல், குடும்பம், அதிரடி என அனைத்தையும் கொண்ட மசாலா திரைப்படம். இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X