X
முகப்பு சினி தரவரிசை

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Goat) படத்தின் கதை இதுதானா... சஸ்பென்ஸ் ஓவர்!

Author Sakthi Harinath | Updated: Thursday, September 5, 2024, 08:16 AM [IST]

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Goat) படத்தின் கதை இதுதானா... சஸ்பென்ஸ் ஓவர்! - முழு தகவல்கள் இதோ. இந்த பட்டியலில் தளபதி விஜய் நடிப்பில் 2024 செப் 5ல் வெளியாகும் 'தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Goat)' திரைப்படத்தின் கதை மற்றும் சுவாரஸ்ய தகவல்கள் இங்கு விரிவாக உள்ளது. இங்கு உள்ள கதை பற்றிய தகவல்கள் இப்படத்தின் டிரைலர் மற்றும் ப்ரோமோஷன் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது. படக்குழு மற்றும் திரைப்படத்தின் கதை இதுதான் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை. முழு தகவல்கள் இதோ.


cover image
Video Thumbnail

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) - தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம்

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) - இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தளபதி' ஜோசப் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட பிரபல தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி, கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இணைந்து 'AGS என்டர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) திரைப்படம் நடிகர் விஜய் திரைவாழ்வில் இவர் நடித்துள்ள 68வது திரைப்படமாகும். 


Video Thumbnail

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) - படக்குழு

தி கோட் படத்தில் விஜய் நாயகனாக நடிக்க, இவருடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர், மைக் மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், லைலா, பிரேம்ஜி அமரன், யோகி பாபு, வைபவ், வி டி வி கணேஷ், பார்வதி நாயர் என பல தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிரடி - திரில்லர் படமாக உருவாகியுள்ள 'தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்)' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சித்தார்த்த நுனி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன் எடிட்டிங் செய்துள்ளார்.


Video Thumbnail

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) - ரிலீஸ்

300 முதல் 400 கோடிகள் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், உலகமுழுவதும் 5000+ திரையில் வெளியாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ல் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் ரிலீஸ் படமாக திரைக்கு வந்துள்ள 'தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்)' திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.


தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) திரைப்படத்தினை AGS என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, இப்படத்தினை தமிழகம் முழுவதும் 'ரோமியோ பிக்சர்ஸ்' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. மேலும் இப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் (தமிழகம் & கர்நாடக), மைத்திரி மூவி மேக்கர்ஸ் (ஆந்திரா & தெலுங்கானா), ஜீ ஸ்டுடியோஸ் (வட இந்தியா), ஸ்ரீ கோகுலம் மூவிஸ் (கேரளா) ஆகிய நிறுவனங்கள் இந்திய முழுவதும் விநியோகம் செய்துள்ளது.


Video Thumbnail

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) - கதை

காந்தி (விஜய்) நண்பர்களுடன் இணைந்து யாரும் முடிக்க முடியாத மிஷன் & வழக்குகளை அதிரடியாக முடிக்கும் வல்லமை படைத்தவர். இவர் தீவிரவாதம் மற்றும் அரசாங்கத்தை எதிர்க்கும் வில்லன்களை அழிக்கும் இந்திய பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் RAW ஏஜென்ட் படையில் ஒருவர்.


விஜய் தனது நண்பர்கள் பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர் உடன் இணைந்து வில்லன் படையை எதிர்க்கிறார். அந்த சண்டையில் விஜய் வெற்றி பெற்றதும் வில்லனை அழித்ததாக நினைத்துக்கிண்டு அங்கிருந்து வருகின்றனர்.


வில்லன் 'மைக் மோகன்' விஜய் உடன் மோதும் சண்டையில் விபத்தில் சிக்கி மயக்கம் அடைகிறார். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்புகிறார். தனது தோல்விக்கு காரணமாக இருக்கும் விஜய் மற்றும் அவரது நண்பர்களை பழிவாங்க நினைக்கும் மைக் மோகன், விஜய்-யின் மூத்த மகனை சிறுவயதில் கடத்தி செல்கிறார்.


மூத்த மகன் இறந்துவிட்டார் என எண்ணி விஜய் தனது மனைவி சினேகா வுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். விஜய் மகன் (ஜீவன்)-யை கடத்தி தனது மகன் போல வளர்த்து அவனை விஜய்-யை எதிர்க்க வைக்கிறார், மைக் மோகன்.


தொடக்கத்தில் தனது மகன் கிடைத்துவிட்டான் என்ற குஷியில் காந்தி (தளபதி) & ஜீவன் (இளைய தளபதி) இருவரும் சந்தோசத்தில் மிதக்க, பின்னர் அடுத்தடுத்து பல ட்விஸ்ட் மற்றும் சம்பவங்கள் நடக்கிறது. இதனால் விஜய் நண்பர்கள் பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர் என ஒவ்வொருவரும் படிப்படியாக இறக்க, இந்த சூழலில் இருந்து விஜய் தன்னை மற்றும் தனது குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதே படத்தின் கதை.

Video Thumbnail

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) - வசூல் வேட்டை

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) திரைப்படத்தின் ஆன்லைன் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ₹125 கோடிகளுக்கு கைப்பற்றியுள்ள நிலையில், இப்படத்தினை தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் ₹93 கோடிகளுக்கு பெற்றுள்ளது. 


2023 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் லியோ படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளது. பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் வாரிசு படம் 300 கோடிகளையும், லியோ படம் 600 கோடிகள் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து வெளியாகும் 'தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்)' திரைப்படம் பெரிய அளவில் சாதனை படைக்கும் என படக்குழு மற்றும் திரைப்பட விமர்சன நிபுணர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+