twitter
    X
    Home சினி தரவரிசை

    தமிழ் படத்திலிருந்து ரீமேக் செய்துள்ள கன்னட படங்களின் பட்டியல்

    Author Sakthi Harinath | Updated: Saturday, July 8, 2023, 05:45 PM [IST]

    இந்தியாவில் திரைப்பட ரசிகர்கள் தங்களின் மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு பெரும் வரவேற்புகள் அளித்து கொண்டாடுகின்றனர். வெற்றி பெற்ற படத்தினை திரைக்கதையில் அதிக விருப்பம் கொண்டுள்ள வேற்று மாநிலங்களில் வாழும் திரைக்குழு அவரவர் மொழிகளில் அந்தந்த படங்களை ரீமேக் செய்து வருகின்றனர். இந்த பட்டியலில் தமிழ் படத்திலிருந்து ரீமேக் செய்துள்ள கன்னட படங்கள் இங்கு உள்ளது. இந்த தொகுப்பில் தமிழில் வெற்றி பெற்றுள்ள பிரபல கன்னட ரீமேக் படங்கள் மற்றும் அதனின் விவரங்கள் இங்கு உள்ளது.

    cover image
    பாட்ஷா

    பாட்ஷா

    1

    தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவாகி பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள திரைப்படம். இப்படத்தின் திரைக்கதை பெரிய அளவில் பாராட்டினை பெற்று பிரபலமாகியுள்ளது. இப்படத்தினை கன்னடத்தில் "கோட்டி கொப்பா" என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

    96

    96

    2

    2019ம் ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற காதல் காவியம். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் கன்னடத்திலும் "99" என்ற தலைப்பில் உருவாகி வெளியானது. ஆனால் இப்படம் கன்னடத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

    பொல்லாதவன்

    பொல்லாதவன்

    3

    வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமான அதிரடி திரைப்படம். இப்படத்தினை "புண்ட" என்ற தலைப்பில் கன்னடத்தில் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இப்படமும் கன்னடத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

    தேவர் மகன்

    தேவர் மகன்

    4

    தமிழில் "ஆஸ்கார்" விருத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட பிரபல திரைப்படம். இப்படத்தின் அதிரடி காட்சிகள் மற்றும் வசனங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கன்னடத்திலும் இப்படம் வெளியாகியுள்ளது.

    அமர்க்களம்

    அமர்க்களம்

    5

    அசுரா என்ற தலைப்பில் கன்னட படமாக இப்படம் வெளியாகி கன்னட திரையுலகில் பெரிய வெற்றி பெற்றுள்ள திரைப்படம். இப்படம் தமில் அமர்க்களம் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.இந்த இரு படங்களே இரு மாநிலங்களில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள திரைப்படம்.

    தளபதி

    தளபதி

    6

    மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் - மம்மூட்டி நடித்துள்ள அதிரடி திரைப்படம். இப்படம் இன்றும் தமிழ் திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தினை கன்னடத்தில் "அன்னவரு" என்ற தலைப்பில் கன்னட நடிகர்கள் நடித்துள்ளனர்.

    ப.பாண்டி

    ப.பாண்டி

    7

    நடிகர் தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் உருவான காதல் திரைப்படம். இப்படத்தினை கன்னடத்தில் கன்னட நடிகர் மற்றும் சுஹாசினி முன்னணி கதாபாத்திரத்தில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்.

    பிதாமகன்

    பிதாமகன்

    8

    பாலாவின் இயக்கத்தில் பிதாமகன் என்ற தலைப்பில் உருவான அதிரடி திரைப்படம். இப்படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை மற்றும் நடிகர் விக்ரமின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டு பல விருதுளை அள்ளித்தந்துள்ளது. இப்படத்தின் சூர்யா கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் "தர்ஷன்" விக்ரம் கதாபாத்திரத்தில் "கிச்சா" நடித்துள்ளனர்.

    வேலையில்லா பட்டதாரி

    வேலையில்லா பட்டதாரி

    9

    தனுஷின் 25-வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று தனுஷை ஒரு முன்னணி தமிழ் நடிகராக உயர்த்திய திரைப்படம். இப்படத்தினை கன்னடத்தில் "ப்ருஹஸ்பதி" என்ற தலைப்பில் உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர்.

    இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

    இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

    10

    நகைச்சுவை படமாக தமிழில் வெளியாகி வெற்றி விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ள விஜய் சேதுபதியின் "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" திரைப்படத்தினை கன்னடத்தில் "ஜாக்சன்" என்ற தலைப்பில் உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர்.

    களவாணி

    களவாணி

    11

    யஷ் நடிப்பில் தமிழில் பிரபலமான களவாணி படத்தின் ரீமேக் படம் தான் "கீர்த்தக" இப்படத்திலும் நடிகை ஓவியா நாயகியாக நடித்துள்ளார். சற்று நடிகர்களின் மாற்றத்தில் உருவாகியுள்ள இப்படம் கன்னடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

    சுந்தர பாண்டியன்

    சுந்தர பாண்டியன்

    12

    சசிகுமார் நடிப்பில் பெரிய ஹிட் அடித்த படம் தான் "சுந்தர பாண்டியன்" இப்படத்தினை நடிகை யஷ் நாயகனாக கன்னட திரையுலகில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

    காஞ்சனா

    காஞ்சனா

    13

    காஞ்சனா திரைப்படத்தில் கன்னட ரீமேக் திரைப்படம் தான் "கல்பனா". இப்படம் கன்னடத்தில் பெரிய வரவேற்பினை பெற்று பிரபலமானது.

    சாமி

    சாமி

    14

    ஹரி - விக்ரம் கூட்டணியில் உருவான அதிரடி திரைப்படம் தான் சாமி. இப்படத்தையும் கன்னடத்தில் "அய்யா" என்ற தலைப்பில் உருவாக்கியுள்ளனர்.

    வருத்தப்படாத வாலிபர் சங்கம்

    வருத்தப்படாத வாலிபர் சங்கம்

    15

    தமிழில் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" என்ற தலைப்பில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படம் கன்னடத்தில் "அத்யாக்ஷ" என்ற தலைப்பில் நகைச்சுவை படமாக வெளியானது. இப்படம் கன்னட திரையுலகில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

    தில்லுக்கு துட்டு

    தில்லுக்கு துட்டு

    16

    கன்னட நடிகர் கணேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திகில் மற்றும் நகைச்சுவை திரைப்படம் இந்த "கிம்மிக்". இப்படம் தமிழில் வெற்றி பெற்றுள்ளது, ஆனால் கன்னடத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

    யுத்தம் செய்

    யுத்தம் செய்

    17

    மிஸ்க்கின் இயக்கத்தில் சேரன் நடிப்பில் உருவான திரில்லர் க்ரைம் திரைப்படம் தான் யுத்தம் செய். இப்படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ள கன்னட திரைக்குழு இப்படத்தினை "கார்சனே" என்ற தலைப்பில் உருவாக்கியுள்ளனர்.

    சின்ன கவுண்டர்

    சின்ன கவுண்டர்

    18

    விஜயகாந்த் நடிப்பில் தமிழ் திரையுலகில் மிக பெரிய வெற்றி பெற்றுள்ள திரைப்படம் தான் சின்ன கவுண்டர். இப்படத்தினை கன்னடத்தில் "சிக்கி ஜம்னாரு" என்ற தலைப்பில் உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X