தமிழ் சினிமாவில் காதல், நட்பு, அதிரடி கிரைம் என பல ஜானர்களில் திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. மாடன் திரைப்பட உலகில் இயக்குனர்கள் கம்மிப் பட்ஜெட்டில் ஆடியன்ஸை ஈர்க்கும் வகையில் படம் எடுக்க தொடங்கினார்கள். அதில் ஒரு ஜானர் தான் அடல்ட் காமெடி. தமிழ் சினிமாவில் பல அடல்ட் காமெடி திரைப்படங்கள் இருக்கின்றது அவற்றில் ஆபாசத்தின் உச்சமாக சில படங்கள் இருக்கின்றது, சில படங்கள் ஆபாசம் இல்லாமல் நம் முகத்தை சுழிக்காதவாறு சரியான கோடில் எடுக்கப்பட்டுள்ளது அவை நண்பர்களுடன் பார்க்க சிறந்த படமாக அமைகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த அடல்ட் காமெடி திரைப்படத்தை எந்த பட்டியலில் காண்போம்.