Celebs » Kajal Aggarwal » Biography
பயோடேட்டா
காஜல் அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகை. இந்தி திரைப்படமான கியூன்..! ஹோ கயா நா-வில் 2004-ம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார்.

மும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவருடைய தங்கை நிஷா அகர்வால், தெலுங்கு, தமிழ்த் திரைப்பட நடிகை. இவர் தன்னுடைய கல்வியை மும்பையிலேயே முடித்த பிறகு, விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் ஆரம்பகாலத்தில் நடித்த கியூன்...! ஹோ கயா நா, ஐஷ்வர்யா ராயின் தோழியாக நடித்த அப்பாத்திரம் பெரியதாக பேசப்படவில்லை. பின்னர் 2007-ம் ஆண்டு லக்‌ஷ்மி கல்யாணம் திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு திரைத்துறையில் முக்கிய கதாமாந்திராக அறிமுகமானார், இதுவும் வெற்றிபெற தவறியது. ஆண்டின் இறுதியில் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் சந்தமாமா திரைப்படத்தில் நடித்தார், இது அவருடைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவிபுரிந்தது.

அதன்பிறகு 2008-ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத்துடன் இவர் நடித்த பழனி திரைப்படம் தமிழில் வெளியானது. பின்னர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிறு வேடத்தில் சரோஜா திரைப்படத்திலும் பிறகு பாரதிராஜாவின், பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடித்தார், ஆயினும் மிகவும் தாமதமாக வெளியான இத்திரைப்படமும் எடுபடவில்லை.

2009-ம் ஆன்டு இவர் நான்கு திரைப்படத்தில் நடித்தார். அதுவரையில் இவர் நடித்த சரியாக ஒடாத நிலையைல், எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் இளவரசியாக இவர் நடித்த மஹதீரா மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது, இவருக்கும் பாராட்டுகள் குவிந்தன. இவருக்கு அத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததிற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த டார்லிங்க் (2010), பிருந்தாவனம் (2010), மிஸ்டர் பெர்பெக்ட் (2011), பிஸ்னஸ் மேன் (2012) என அனைத்துத் திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார்.

அதன்பிறகு, சூர்யாவுடன், மாற்றான் திரைப்படத்திலும் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் துப்பாக்கி மற்றும் ஜில்லா ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில், மகேஷ் பாபுவுடன் இணைந்து சுகுமாரின் பெயரிடப்படாத திரைப்படமொன்றிலும் நடித்து வருகிறார்.