X
ரத்னம்

ரத்னம்

Action | Drama | Family | 26 Apr 2024 | U/A | 156 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

ரத்னம் கதை

ரத்னம் - இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் கிருஷ்ணன் நாயகனாக நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் அலங்கர் பாண்டியன் மற்றும் தமிழ் சினிமா இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அதிரடி - திரில்லர் மற்றும் குடும்ப படமாக உருவாகியுள்ள ரத்னம் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எம் சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் டி எஸ் ஜே எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க இவருடன் இணைந்து யோகி பாபு, பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன் என தமிழ் சினிமா முன்னணி பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். ரத்னம் திரைப்படத்தின் படக்குழு & திரைநட்சத்திரங்கள் பூஜை, தாமிரபரணி ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் ஹரி - விஷால் இணைந்துள்ளது மூன்றாவது திரைப்படம், ரத்னம். இப்படம் உலகமெங்கும் 2024 ஏப்ரல் 26ல் திரையரங்கில் வெளியாகியுள்ளது, ரத்னம் படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.  ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்துள்ள ரத்னம் திரைப்படத்தினை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் பிக் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து உலகம் முழுவதும் ரத்னம் படத்தினை விநியோகம் செய்துள்ளது. ரத்னம் திரைப்படத்தின் டீசர், டிரைலர் & பாடல் வீடியோக்கள் ரத்னம் திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ' ஜீ தமிழ் ' நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், இப்படத்தின் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமையை ' அமேசான் பிரைம் வீடியோ ' நிறுவனம் பெற்றுள்ளது. ரத்னம் திரைப்படத்தின் கதை கதைக்கரு : ரத்னம் (விஷால்) தமிழ் நாடு - ஆந்திரா எல்லையில் வசிக்கும் இளைஞர், ஜனனி (பிரியா பவானி ஷங்கர்) நாயகியை பார்த்ததும் காதலிக்க தொடங்கும் விஷால், அவரின் உயிருக்கு ஆபத்து என அறிந்து நாயகியை காப்பாற்ற பலரை எதிர்க்கிறார். கதை எம்.எல்.ஏவாக நடித்துள்ள சமுத்திரகனியின் அடியாளாக இருக்கிறார் ரத்னம். ஊரில் யாராவது ஏதாவது தப்பு செய்தால் தூக்கிப் போட்டு மிதிப்பதில் இருந்து ஆளையே காலி பண்ணும் அளவுக்கு எதற்கும் துணிந்தவனாக விஷாலை அறிமுகப்படுத்துகிறார் ஹரி. நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவி பிரியா பவானி சங்கரை சிலர் கொல்வதற்காக துரத்த ஹீரோயினை காப்பாற்றும் பொறுப்பை கையில் எடுக்கும் விஷால் எதற்காக அவரை காப்பாற்ற போராடுகிறார். அவருக்கும் விஷாலுக்கும் உள்ள தொடர்பு என்ன? மெயின் வில்லன் யாரு? என்பதே ரத்னம் திரைப்படத்தின் கதை
Read More

ரத்னம் நடிகர்கள் & படக்குழுவினர்

ரத்னம் அணியின் தகவல்

இயக்குனர் ஹரி
கதை ஹரி
சங்கதி ஹரி
ஒளிப்பதிவாளர் சுகுமார்
தொகுப்பாளர் பாலாஜி பிவி
இசை தேவி ஸ்ரீ பிரசாத்
தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ரத்னம் விமர்சகர்களின் விமர்சனம்

Tamil Filmibeat
ரத்னம் - தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்

ரத்னம் ட்ரெய்லர்

Video Thumbnail

ரத்னம் பாடல்கள்

ரத்னம் செய்திகள்

ரத்னம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ரத்னம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+