ஹரிஷ் உத்தமன் பயோடேட்டா

    ஹரிஷ் உத்தமன் இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் தென்னிந்திய திரைப்படங்கள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பவர். இவர் 2010-ம் ஆண்டு "தா" திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    பாராமவுண்ட் ஏர்வேஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனங்களில் தலா மூன்றாண்டுகள் பணியாற்றிய ஹரிஷ் உத்தமன் பின்னர் சூர்ய பிரபாகரன் இயக்கிய தா என்ற தமிழ் படத்தில் நடித்தார். அதே படத்திற்காக நார்வே தமிழ் படவிழாவில் சிறந்த புதுமுக விருதைப் பெற்றார். பின்னர் ராதா மோகன் இயக்கத்தில் கௌரவம் படத்தில் நடித்தார்.

    சூரிய பிரபாகரன் இவரை இயக்குனர் சுசீந்திரனிடம் சிபாரிசு செய்தார். சுசீந்திரன் இயக்கத்தில் வில்லனாக இவர் நடித்து வெளிவந்த பாண்டிய நாடு திரைப்படம் இவரது சினிமா வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்தது.