X
காஜல் பசுபதி
Actress

காஜல் பசுபதி பயோடேட்டா

காஜல் பசுபதி சன் ம்யூசிக்கில் தொலைக்காட்சியில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர், திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். 

திரையுலக தொடக்கம்

காஜல் பசுபதி தனது திரைப்பயணத்தை சன் ம்யூசிக்கில் தொலைக்காட்சியில் ஒரு வீடியோ தொகுப்பாளராக தொடங்கியுள்ளார். அதன் அறிமுகம் கொன்டு பல திரைப்படங்களில் ஒரு சில சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார்.

இவர் திரைப்படங்களை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கஸ்தூரி தொடரில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கு பின்னர் திரைப்படங்களில் குறிப்பிடப்படும் கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

காஜல் பசுபதி 2004-ஆம் ஆண்டு வசூல் ராஜா திரைப்படத்தில் ஒரு செவிலியராக தோன்றி திரையில் அறிமுகமான இவர், இப்படத்தினை தொடர்ந்து பல திரைப்படங்களில் யாரும் கண்டறியப்படாத கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார்.

காஜல் பசுபதி 2006-ஆம் ஆண்டு டிஷ்யூம் திரைப்படத்தில் நாயகியின் தோழியாகவும், கள்வனின் காதலி திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக்-ற்கு ஜோடியாக நடித்து தனக்கென ஓரு அடையாளத்தை திரையுலகில் பதித்துள்ளார்.

பிரபலம்

தொகுப்பாளினியாக சன் ம்யூசிக்கில் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ள இவர், திரைப்படங்களில் நடித்து பிரபலமானார், இதனை தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிரபல நடன நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இவர் 2018-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.

திருமணம்

இவர் திரைத்துறையில் பிரபல நடன ஆசிரியரான சாண்டி மாஸ்டர் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்து வாழ்கின்றனர்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+