லட்சுமி இராமகிருஷ்ணன் பயோடேட்டா

  லட்சுமி இராமகிருஷ்ணன், தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் பிரபல தமிழ் திரையுலக பெண் இயக்குனரும் ஆவார். இவர் மலையாள திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்து பல விருதுகளை வென்று பிரபலமானவர், பின் தனது பிரபலத்தின் மூலம் தமிழ் திரையுலகில் குணச்சித்ரா கதாபாத்திரத்திலும், துணை நடிகையாக அறிமுகமான இவர், தமிழில் சில படங்களை இயக்கியும் புகழ் பெற்றுள்ளார்.

  2006-ஆம் ஆண்டு "சக்கர முத்து" என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை ஒரு குணச்சித்திர நடிகையாக தொடங்கியுள்ள இவர், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

  திரைப்படத்தினை தொடந்து இவர் இந்தியாவில் பிரபல முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான "ஜீ தொலைக்காட்சி" நிறுவனத்தின் ஒரு அங்கமான "ஜீ தமிழ்" தொலைக்காட்சியில் 2012 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை மிகவும் சர்ச்சையாக தமிழ் திரையுலகில் பிரபலமான "சொல்வதெல்லாம் உண்மை" என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தொகுத்து வந்துள்ளார். 

  தமிழ் திரையுலகில் இவர் இயக்குனர் மற்றும் நடிகையாக பணியாற்றி இருந்தாலும், இந்த "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சி இவருக்கு மக்கள் மத்தியில் ஒரு அடையாளமாக உள்ளது.

  பிறப்பு (தனிப்பட்ட வாழ்க்கை)

  லட்சுமி ராமகிருஷ்ணன், ஒரு பேஷன் டிசைனர் மற்றும் பிரபல தனியார் நிறுவனத்தின்  ஒரு முக்கிய பொறுப்பில் 1992 முதல் 2001-ஆம் ஆண்டு வரை முஸ்கேட் என்ற நகரத்தில் ஓமான் நாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். பின்னர் இந்தியாவிற்கு திரும்பியுள்ளார்.

  பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் லோஹிட்டாஸ் அவரது திரைப்பட படப்பிடிப்பிற்காக லட்சுமி ராமகிருஷ்ணன் இல்லத்தினை உபயோகப்படுத்த இவரை அணுகினார். ஆச்சமையம் லட்சுமி தேடி வந்த திரையுலக வாய்ப்பினை சரியாக உபயோகித்துள்ளார்.

  இயக்குனர் லோஹிட்டாஸ் அவரின் "சக்கர முத்து" என்ற திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இவர் திரையுலகில் அறிமுகமானார். பின் இவரின் பரிந்துரையில் தமிழில் கரு பழனியப்பனின் "பிரிவோம் சந்திப்போம்" திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில்  திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

  திரையுலக அனுபவம்

  லட்சுமி இராமகிருஷ்ணன், மலையாள திரைப்படத்தில் 2006-ஆம் ஆண்டு "சக்கர முத்து" என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பினை பெற்று ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். பின் 2007ஆம் ஆண்டு "ப்ரணயக்காலம்", "ஜூலை 4", "நாவல்" (2008) என மலையாள திரைப்படத்தில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார்.

  மலையாளத்தில் இவர் நடித்து திரையுலகில் அறிமுகமான "சக்கர முத்து" திரைப்படம், இவருக்கு ஒரு நல்ல வரவேற்பினை பெற்று தந்துள்ளது. அந்த ஆண்டு சிறந்த துணை நடிகர் மற்றும் சிறந்த கதாபாத்திரத்திற்கான விருதுகளில் பல்வேறு மலையாள திரைப்பட விருதுகளில் இவர் பரிந்துரைக்கப்பட்டு திரையுலகின் பலரின் கவனத்தை பெற்றுள்ளார்.

  இவரை திரையுலகில் அறிமுகப்படுத்திய இயக்குனர் லோஹிததாஸ் என்பவரின் பரிந்துரையில் தமிழில் லட்சுமி இராமக்ரிஷ்ணன், கரு பழனியப்பன் இயக்கிய "பிரிவோம் சந்திப்போம்" திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

  தமிழ் திரையுலகில் இவர், பொய் சொல்ல போறோம், எல்லாம் அவன் செயல், யுத்தம் செய் போன்ற திரைப்படங்களில் ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து மக்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை கவர்ந்த இவர், ஒரு முக்கிய பிரபலமாக அறியப்பட்டார்.

  பிரபலம்

  லட்சுமி இராமகிருஷ்ணன், மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகினாலும், தமிழ் திரையுலகம் மூலம் பிரபலமாக புகழ் பெற்றுள்ளார். இவர் பல்வேறு கதாபாத்திரங்களில் பல படஙக்ளில் நடித்திருந்தாலும், தமிழ் சின்னத்திரையில் இவர் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய "சொல்வதெல்லாம் உண்மை" என்ற நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த தொடரினை பலர் விமர்சித்து பல நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் கேலியும் கிண்டலுமாக விமர்சித்து பல விடியோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணன், இந்த நிகழ்ச்சி வாயிலாக தமிழ் திரையுலகில் மிகவும் புகழ் பெற்றுள்ளார். 

  தொலைக்காட்சி அனுபவம்

  தொலைக்காட்சியில் இவர் "தி ஆஃபீசர்" என்ற மலையாள தொடரில் 2008-ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார்.

  தமிழில் 2001-2013 ஆம் ஆண்டு "அவள்" என்ற ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரிலும், 2012-2018 வரை சொல்வதெல்லாம் உண்மை ஜீ தொலைக்காட்சியிலும் மற்றும் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ, நேர்கொண்ட பார்வை என பல தொடர் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்குபெற்றும் தொகுத்து வந்துள்ளார்.