பிரியங்கா மோகன் பயோடேட்டா

    பிரியங்கா மோகன் (பிரியங்கா அருள் மோகன்) தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான "ஒந்து கதை ஹெல" என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். அதற்கு பின்னர் அதே ஆண்டு தெலுங்கு சினிமாவில் பிரபல வெற்றி திரைப்படமான "கேங் லீடர்" திரைப்படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இப்படம் தென்னிந்திய அளவில் மிக பெரிய வரவேற்பினை பெற்று பிரபலமானதை தொடர்ந்து இப்படத்தின் நாயகி 'பிரியங்கா மோகன்' தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை பெற்று புகழ் பெற்றார்.


    தமிழில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்து அறிமுகமான இவர், பின்னர் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' திரைப்படத்திலும் நடிக்க நாயகியாக ஒப்பந்தமாகி நடித்துள்ளார்.