twitter
    Celebs»Ramesh Kanna»Biography

    ரமேஷ் கண்ணா பயோடேட்டா

    ரமேஷ் கண்ணா இந்திய திரையுலக தமிழ் திரைப்பட இயக்குனரும், நகைச்சுவையாளரும், துணை நடிகரும் ஆவார். இவர் நாடக காவலர் ஆர்.எஸ் மனோகர் அவர்களின் நாடகப் பட்டறையில் சிறு வயதிலிருந்தே நடித்துவந்துள்ளார். பின்னர் தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களான காரைக்குடி நாராயணன், பாண்டியராஜன், கோடி ரமேஷ்கிருஷ்ணன், விக்ரமன் மற்றும் கே. எஸ். ரவிக்குமார் ஆகியோரிடம் துணை இயக்குனராக பணியாற்றி திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

    இவர் நடிகராக இயக்குனர் விக்ரமனின் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகியுள்ளார். பின்னர்  உன்னை நினைத்து, பிரண்ட்ஸ், படையப்பா, வில்லன் மற்றும் ஆதவன் போன்ற திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.

    சென்னையில் பிறந்துள்ள இவர், குடும்ப வறுமை காரணமாக சிறுவயதிலிருந்தே நாடக பட்டறையில் நடித்து வந்துள்ளார். இவர் 1000-திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ள இவர், துணை இயக்குனராக தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். பின்னர் இவர் 1988-ம் ஆண்டு டாப் டக்கர் என்ற நகைச்சுவை தொலைக்காட்சி தொடர் ஒன்றினை நகைச்சுவை நடிகர் விவேக்-யை கொண்டு இயக்கியுள்ளார். பின்னர் 1999-ம் ஆண்டு அஜித் தேவயானி நடித்த தொடரும் என்ற காதல் திரைப்படத்தினை இயக்கி திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

    திரைப்படங்களில் மட்டுமின்றி கேப்டன் தொலைக்காட்சியில் அசத்தல் அரங்கம் என்ற நிகழ்ச்சியை தொகுப்பாளராக தொகுத்து வந்துள்ளார்.