»   »  தியா பண்ணிய வம்பு!

தியா பண்ணிய வம்பு!

Subscribe to Oneindia Tamil

கல்யாண வேகத்தில் இருக்கும் தியா, கட்டக் கடைசியாக நடித்துக் கொண்டிருக்கும் வம்புச் சண்ட படத்தின்இரு பாடல் காட்சிகளை முடித்துக் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தார். இப்போது ஒரு வழியாகபாட்டுக்கு ஆட்டம் போட முன் வந்துள்ளாராம்.

தியாவுக்கு கல்யாணம் ஆகப் போகிறது. அதற்குள் ஒத்துக் கொண்ட படங்களை வேக வேகமாக முடித்துக்கொடுத்து வருகிறார். சத்யராஜுடன் நடித்து வரும் வம்புச்சண்ட படத்தில் தனது காட்சிகள் அனைத்தையும்முடித்துக் கொடுத்து விட்டார்.

ஆனால், இரண்டே இரண்டு பாடல்கள் மட்டும்தான் பாக்கியாம். திடீரென பாடல் காட்சிகளுக்கு நடிக்க வராமல்இழுத்தடிக்க ஆரம்பித்தார் தியா. இதனால் வம்புச் சண்ட படத்தை முடிப்பது இழுபறியானது.

தியாவிடம் தேதி கேட்டு அலைந்து தேய்ந்து போயிவிட்டாராம் இயக்குநர். இப்போது ஒரு வழியாக பாட்டுப்பாடி ஆட கால்ஷீட் கொடுத்துள்ளாராம் தியா.

இதையடுத்து இந்தப் பாடல்களை ஹைதராபாத்தில் ஷூட் செய்யவுள்ளனராம். தியாவுடன் கடைசியாகஇணைந்து ஆடிப் பாடப் போகும் பாக்கியசாலி ஹீரோ உதய்கிரண்.

வருகிற 23ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை வம்புச்சண்ட படத்தின் பாடல் காட்சிகளை முடித்துக்கொடுக்கவுள்ளார் தியா. அதன் பின்னர் குடும்பச் சண்டையில் குதிக்கப் போகிறாராம். அதாங்க, கல்யாணம்கட்டிக்கப் போகிறார்..

வாழ்த்துவோம், நம்மால முடிஞ்சது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil