Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பல எதிர்மறை எண்ணங்கள் மனதில் வரலாம்...
- News
இது மோசடி! ஏமாறாதீங்க.. மின் இணைப்பு தொடர்பான மெசெஜ் பற்றி சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் அட்வைஸ்!
- Sports
தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ துரோகம்.. நம்ப வைத்து ஏமாற்றம்.. மீண்டு வருவாரா DK
- Finance
இனி உங்க இஷ்டத்துக்கு வீடியோ போட முடியாது.. சமூக வலைத்தள வீடியோவுக்கு கடிவாளம்!
- Automobiles
ஹூண்டாயிடம் கவரவத்தை பறி கொடுத்த டாடா.... என்னங்க இப்படி ஆகிபோச்சு
- Technology
இனி 6 மட்டும் "இல்ல" அனைத்தும் உங்களுக்கு தான்: வாட்ஸ்அப் புது அம்சம்
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் முக பக்கவாத நோயால் பாதிப்பு
டொரன்டோ : கனடா நாட்டின் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் முக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.
கனடாவின் பிரபல பாடகராக இருப்பவர் ஜஸ்டின் பீபர். 28 வயதாகும் பீபர் ஆரம்பரத்தில் யூட்யூப்பில் பாப் பாடல்களை பாடி வெளியிட்டு, உலகம் முழுவதும் பிரபலமானார். இவரது பாப் பாடல்கள் மட்டுமல்ல சர்ச்சைகளும் மிக பிரபலம்.
மிக இளம் வயதிலேயே புகழின் உச்சியை தொட்ட பீபர், அடிக்கடி குடித்து விட்டு வேகமாக காரை ஓட்டி போலீசில் சிக்குவதை வாடிக்கையாகக் கொண்டவர். ஒருமுறை வீட்டின் முன் கூடியிருந்த ரசிகர்களை நோக்கி வீட்டின் பால்கனியில் இருந்து எச்சில் துப்பி பெரிய சர்ச்சையில் சிக்கினார். பக்கத்து வீட்டின் மீது முட்டைகளை வீசுவது, பல பெண்களுடன் டேட்டிங் செல்வது என பல சர்ச்சைகளில் சிக்கி வந்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் காலில் விழுந்த பிரபல பாடகர்... இதுக்கு தான் அப்படி செய்தாரா?

பீபருக்கு முக பக்கவாதம்
உலகில் டாப் பாடகர்கள் லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ள பீபர், தற்போது தான் மிகவும் அரிதான முக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இந்த நோயின் பாதிப்பு காரணமாக முகத்தின் ஒரு பகுதி செயலிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

கச்சேரிகள் ஒத்திவைப்பு
மிக விரைவில் உலகம் முழுவதும் சென்று இசைக் கச்சேரிகள் நடத்த பீபர் திட்டமிட்டிருந்தார். தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக இசைக் கச்சேரிகளை அவர் ஒத்திவைத்துள்ளார். ராம்சே ஹன்ட் என்ற அரிய வகை நோயால் பீபர் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த வகை நோய் முகத்தில் உள்ள உறுப்புக்களை செயலிழக்க வைத்து விடும். முகத்தில் உள்ள நரம்புகளை தாக்கக் கூடிய நோய் என்பதால், பீபருக்கு முக பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.
பீபர் வெளியிட்ட வீடியோ
பீபருக்கு முகத்தின் வலது புறம் செயலிழந்து உள்ளது. தனக்கு ஏற்பட்டுள்ள நோயின் பாதிப்பை அவரே வீடியோவாக வெளியிட்டு விளக்கி உள்ளார். அதில் அவர், அடுத்தடுத்து நான் எனது இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்து வருவது எனது ரசிகர்களை விரக்தி அடைய வைத்துள்ளதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உடல் ரீதியான பிரச்சனைகள் காரணமாகவே கச்சேரிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனக்கு தற்போது மிகவும் சோர்வாக உள்ளது. நீங்கள் எனது உடல்நிலையை புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். எனது முகத்தின் வலது பக்கத்தை என்னால் கன்ட்ரோல் செய்ய முடியவில்லை.

கவலையில் உருகும் ரசிகர்கள்
ஒரு பக்கம் முழுவதும் முடங்கி உள்ளது. இதற்காக இப்போது நான் சிகிச்சை பெற்று வருகிறேன். இதிலிருந்து எப்போது நான் குணமடைவேன் என எனக்கு தெரியவில்லை. முழுமையாக குணமடைய எனக்கு முழு ஓய்வு தேவை. எனவே தான் எனது இசைக்கச்சேரிகளை ரத்து செய்து விட்டு ஓய்வெடுத்து வருகிறேன் என்றார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பீபர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்தும், தங்களின் பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.