ஏ.ஆர்.ரஹ்மான் காலில் விழுந்த பிரபல பாடகர்... இதுக்கு தான் அப்படி செய்தாரா?
மும்பை : அபுதாபியில் நடைபெற்றுவரும் ஐஐஎஃப்ஏ விருது வழங்கும் விழாவில் பிரபல ராப் பாடகர் யோயோ ஹனிசிங், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் காலில் விழுந்து வணங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர், பாப் பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பல முகங்களைக் கொண்டவர் யோயோ ஹனிசிங். 2003 ம் ஆண்டு ரெக்கார்டிங் ஆர்டிஸ்டாக தனது இசை பயணத்தை துவங்கிய இவர் பாலிவுட்டில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். பஞ்சாபி மற்றும் இந்தி படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார். மியூசிக் வீடியோக்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார்.

அபுதாபியில் நடைபெறும் ஐஐஎஃப்ஏ விருதுகள் வழங்கும் விழாவின் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது மேடையில் நடனமாடிய பஞ்சாபி ராப் பாடகர் ஹனிசிங், மேடையிலிருந்து இறங்கி வந்து பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் கால்களில் விழுந்து வணங்கினார்.

காலில் விழுந்து வணங்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள பாடகர் ஹனிசிங், "ஏ.ஆர்.ரஹ்மான் முன்பு பாடியது எனது வாழ்க்கையின் முக்கியமான தருணம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் இணைந்து எடுத்த போட்டோக்களையும், சல்மான் கானின் வருகை தொடர்பான காட்சிகளையும் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஹனிசிங்.


Click it and Unblock the Notifications











