100% காதல் கதை

  100% காதல் இயக்குனர் எம்.எம் சந்திரமௌலி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடித்துள்ள காதல் திரைப்படம். இத்திரைப்படம் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற 100% லவ் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் சுகுமார் தயாரிக்க இசையமைப்பாளர் ஜி.வி.  பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

  இத்திரைப்படத்தின் தகவல்கள்

  இத்திரைப்படமானது 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14ல் காதலர் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தநிலையில், இத்திரைப்படம் சில காரணங்களால் வெளிவரவில்லை, இதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் இத்திரைப்படம் வெளிவரும் என படக்குழுவினர் ஏப்ரல் 12-ல் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.  கதை 

  ஜி வி பிரகாஷ் வீட்டிற்கு அத்தை மகளாக வருகை தருகிறார் ஷாலினி பாண்டே, இவர் ஜி வி பிரகாஷ் படிக்கும் கல்லூரியில் இணைந்து ஜி வி பிரகாஷ் உடன் படிக்க தொடங்குகிறார். இவர்களுக்குள் ஒரு போட்டி நிலவுகிறது, அது யார் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கிறார்கள் என்பதாகும். இதற்காக இருவரும் போட்டி போட்டு படித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த போட்டி இவர்களுக்கு காதலாக மாறுகிறது. பின் இவர்கள் காதலில் நடக்கும் தருணங்களே இப்படத்தின் மீதிக்கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie 100% காதல் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).